கூகுள் டூடுளில் இன்னிக்கு இடம் பெற்றுள்ள(து) சிப்கோ இயக்கம்!

கூகுள் டூடுளில் இன்னிக்கு இடம் பெற்றுள்ள(து) சிப்கோ இயக்கம்!

மனித வாழ்க்கைக்கு மட்டுமின்றி இயற்கை தன் போக்கில் இருக்க உதவும் மரங்களுக்காக தங்கள் உயிரை மாய்த்த பிஷ்ணோய் இன மக்களின், சிப்கோ இயக்கத்தை நினைவு கூறும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ளது.

மனிதக் குற்றங்களால், சுற்றுச் சூழல் வேகமாக அழிந்து வருகிறது. கார்மேகம், குளிர்ந்த காற்று, வானவில் எல்லாம் எதிர்காலத்தில் ஏட்டில்தான் இருக்குமோ என்ற கவலை உருவாகிவிட்டது. கார்மேகம் தோன்றிய வானம் தார் பாலைவனம் ஆகி வருகிற வறட்சி நிலை தோன்றிவிட்டது. உலக அளவில் மழை அதிகம் பெய்யும் இடங்களில் எல்லாம் மழை சிறிதாவது பெய்யாதா என்று ஏங்கும் நிலை உருவாகியுள்ளது. மலைகள் எல்லாம் கிரானைட் கற்களாக விலை போகின்றன. காடுகள் அழிக்கப்படுகிறது, மரங்கள் மொட்டை அடிக்கப்படுகின்றன. காடுகளில் உள்ள மரங்கள் விறகுகளாகவும் வீட்டு உபயோகப் பொருட்களாகவும் மாறுகின்றன. பெரும்பாலான காடுகள் குடியிருப்புப் பகுதிகளாகவே மாறிவிட்டன.

காடுகள் அழிக்கப்படுவதால் இயற்கையாகவே தட்பவெப்ப நிலைகள் மாறுகின்றன. இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்க ஆளில்லை.. ஒரு சிலரோ லட்சம் மரங்கள் லட்சியம் என்ற வாசக பதாகையுடன் அவ்வப்போது கொஞ்சம் மறம் வளர்ப்பது போல் செல்ஃபி எடுத்து தங்களை பிரபலபடுத்திக் கொள்வதுதான் நடக்கிறது.

ஆனால்.. நம் நாட்டில் அதாவது கி.பி. 1730ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய்சிங், தனது அலுவல் வசதிக்காக புதிதாக ஒரு அரண்மனையை மார்வார் என்ற வனப்பகுதியில் அமைக்க நினைத்தார். ஆனால் அந்த பகுதியில் இருந்த மரங்கள் அவரது விருப்பத்திற்கு தடையாக இருந்தது. இதையடுத்து அந்த மரங்களை வெட்ட தனது ஆட்களை அனுப்பினார். ஆனால் அந்த பகுதியில் வாழ்ந்து வந்த ‘பிஷ்ணோய்’ என்ற இன மக்கள் மரங்களை தெய்வமாக கருதி வாழ்ந்து வந்திருக்கின்றனர். (இந்த இனக்குழுக்களில் உள்ள பெண்களிடம் ஒரு வினோத பழக்கம் உள்ளது. அக்காட்டில் தாய் மான் இறந்துவிட்டால் மான் குட்டிகளுக்கு இங்குள்ள பெண்களே தாய் பால் கொடுத்து மூன்று மாதங்கள் கழித்து காட்டில் விடுகிறார்கள். மேலும் ஆண்கள் தங்களின் நிலங்களில் பயிரிடும் பயிர்களில் கொஞ்சம் பயிர்களை அறுவடை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஒடிசா, மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இவர்கள் இன்றும் வாழுகிறார்கள்)

அப்பேர்பட்டவர்கள் மன்னரின் ஆணையை கேட்ட அதிர்ந்து போய் முடிந்தவரை தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் பலன் அளிக்கவில்லை. மன்னரின் உத்தரவின் படி வீரர்கள் மரங்களை வெட்ட வந்தனர். உடனே மரங்களை வெட்டுவதற்கு முன்னர் தம்மை வீழ்த்தச் சொல்லிப் பெண்களும் குழந்தைகளும் மரங்களைக் கட்டிப்பிடித்துப் போராடினர். அதை கண்டு மனம் இளக்காத மன்னனின் உத்தரவை மீற முடியாமல வீரர்களும் மரத்தை கட்டிப் பிடித்திருந்த, மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயான அம்ரிதா தேவியையும் அவரின் குழந்தைகளையும் முதலில் வெட்டிச் சாய்த்தார்கள். இப்படியே 363 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மன்னரின் வீரர்களால் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் மனம் இளகிய மன்னர் இந்த இடமே வேண்டாம் சொல்லி, போர்வீரர்களை அழைத்து கொண்டான்.

சரவ்தேச அளவில் கூட இந்த மக்களின் போராட்டம் தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடைபெற்ற முதல் எதிர்ப்பு. அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான் இந்த நிகழ்வை ‘சிப்கோ இயக்கம்’ என்று பெயரிட்டனர். சிப்கோ என்றால் கட்டிக்கொள்வது என்று பொருள்.

அப்பேர்ப்பட்ட சிப்கோ இயக்கத்தை பூதானை வழிநடத்தி​யவர் ஆச்சார்யா வினோபாவே-வும் சுந்தர்லால் பகுகுணா-வும் மேற்படி சிப்கோ இயக்கத்தை வலுப்படுத்தினார்கள்..அப்படி வலுவான இயக்கத்தின் 45வது ஆண்டு விழாவைதான் கூகுள் கொ/ண்டாடுது..

அடிசினல் ரிப்போர்ட்:

இந்த இயக்கத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்த சுந்தர்லால் பகுகுணாவுக்கு, இந்திய அரசு, 1981-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுக்க முன்வந்தது. ஆனால் அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், ”இமய மலைப் பகுதியில் தினம் தினம் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. பாரத மாதாவின் ரத்தமும் சதையுமாக நினைக்கிறோமே அந்த ‘வளமான மண்’, கடலை நோக்கித் தினமும் போய்க்கொண்டு இருக்கிறது. அது என்று தடுக்கப்படுகிறதோ, அன்றுதான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும். என்று கூறினார்.

Related Posts