32°C
விளம்பரம்
Advertisement

சந்தானத்தின் ஆபாச வசனத்தால் பப்ளிசிட்டியான ‘என்றென்றும் புன்னகை’ ஆல்பம் + டிரைலர்

admin சேலம் Published: October 29, 2013 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கும் படம் ‘என்றென்றும் புன்னகை’, டாக்டர் வி.ராம்தாஸ், தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் இபட்டத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். அகமது இயக்கி உள்ளார். இளமை ததும்பும் காதல் படமான இதன விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருக்கிறார்.

இதற்கிடையில் இந்த படத்தின் டிரெய்லரில், ஒரு இளம்பெண் சந்தானத்திடம், ”5.10க்குப் போலாம்னு இருக்கேன்.” என்கிறார்.சந்தானம் அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு ”ஏன் நல்லாத்தானே இருக்கே? ஐநூறு ஆயிரத்துக்கே நீ போகலாமே?” என்கிறார்.

5 :10 வீட்டிற்கு கிளம்பப் போகிறேன் என்ற பெண்ணிடம் இவ்வாறு கூறுவதா என்று, இசை வெளியீட்டு விழா நடைபெற்ற தினத்தின் இரவில் இருந்ததே, சந்தானத்துக்கு இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியது.தொடர்ச்சியாக எதிர்ப்பு கிளம்பவே, டிரெய்லரில் சந்தானத்தின் அந்த வசனக் காட்சிகளை நீக்கிவிட்டார்கள். ஆனால் படத்திலிருந்தே நீக்கிவிட்டார்களா என்பது இன்னும் தெரியவில்லை.

டிரெய்லர் விடீயோ லிங்க்:::http://www.youtube.com/watch?v=cbTl0pdow7o&feature=youtu.be

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்