காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்?

காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்?

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மட்டும் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக இலங்கை பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. நேற்று இலங்கையிலிருந்து வெளியாகும் “சிலோன் டுடே’ பத்திரிகை, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில், “”இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நவம்பர் 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மட்டும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.நிகழ்ச்சி முடிந்ததும், இலங்கை உள்பட எந்த நாட்டுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தை எதிலும் ஈடுபடாமல் உடனடியாக அவர் புதுதில்லி திரும்புவார்.பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அரசு அதிகாரி ஒருவர் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 - manmohan.mini
மேலும், இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும் இதே தகவலைத் தெரிவித்ததாக இலங்கை அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனினும், இந்த விவகாரம் குறித்து புதுதில்லியிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று கூறியுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகம், இந்த வாரத்துக்குள் தகவல் வருமென்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்பு: இதற்கிடையே, இலங்கை வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ), காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க முடிவு செய்திருந்தாலும், முதல்வர் என்ற முறையில் சி.வி. விக்னேஸ்வரன் இந்த மாநாட்டில் பங்கேற்பார் என டி.என்.ஏ-வின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டி.என்.ஏ. தலைவர் ஆர். சம்பந்தனுக்கும், இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபய ராஜபட்சவுக்கும் இடையில் இம்மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், வடக்கு மாகாணத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதாக கோத்தபய ராஜபட்ச அப்போது உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கையை உடன்படச் செய்யவேண்டுமென்றால், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தில்லி வரும் கோத்தபய: இந்நிலையில், இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோதபய இந்தியாவுக்கு வருகை தரவிருப்பதாக இலங்கை வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், இதுகுறித்து தகவல் எதுவும் வரவில்லை என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.காமன்வெல்த் மாநாட்டை விட, கடலில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Manmohan likely to attend CHOGM inaugural: SL daily
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
A Sri Lankan newspaper has quoted un-named Indian diplomatic sources in Colombo who say that Prime Minister Manmohan Singh is likely to participate in the inaugural session of the Commonwealth Heads of Government Meeting (CHOGM) here on November 15, and return to New Delhi immediately, without having any meetings with member countries, including Sri Lanka.

error: Content is protected !!