கிளாஸ்கோவில் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் கைது – மதுபோதையில் தகராறில் ஈடுப்பட்டனராம்

கிளாஸ்கோவில் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் கைது – மதுபோதையில் தகராறில் ஈடுப்பட்டனராம்

இந்திய ஒலிம்பிக் சங்கப பொதுச் செயலாளர் ராஜீவ் மோத்தா, மல்வுத்த நடுவர் விரேந்திர சிங் மாலிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவர் என்றும் ஸ்காட்லாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
olimpic arreast
கிளாஸ்கோவில் கடந்த 23-ம் தேதி தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 12 நாட்கள் நடைபெற்று இன்றுடன் முடிவடைந்தன. இதில் 56 தங்கப்பதக்கங்களுடன் இங்கிலாந்து முதல் இடத்திலையும் 46 தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ள ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலையும், முன்றாவது இடத்தில் கனடா உள்ளன. பதக்கப்பட்டியலில் 14 தங்கங்களை கைப்பற்றி மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா 5-வது இடத்தை பெற்றுள்ளது..

இதனிடையே ளாஸ்கோவில் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகி கைது ராஜிவ் மேத்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மல்யுத்த நடுவர் வீரேந்திர மாலிக்கையும் ஸ்காட்லாந்து போலீஸ் கைது செய்ததது. போதையில் தகராறு செய்த காரணத்தால் அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரையும் திங்களன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.