32°C
விளம்பரம்
Advertisement

கல்லூரி முதல்வர் கொலை; கல்விக் கட்டமைப்புதான் காரணமா?

admin சேலம் Published: October 12, 2013 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




கல்வி வளாகங்களில் மாணவர்களின் பல்வேறு ஆளுமைகளை வெளிப்படுத்தவோ வளர்த்துக்கொள்ளவோ வாய்ப்புகள் இல்லை. வணிகமயமாக்கப்பட்டுள்ள கல்விச் சூழல், அதே வணிக நோக்கத்தைத்தான் மாணவர்களிடையே வளர்க்கிறது. தாக்குப்பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நியதி, அதில் ஏற்படும் தோல்விகளின் போதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையை ஏற்படுத்துகிறது.
12 - murder
ஆடைக்கட்டுப்பாடு, நட்புக்கட்டுப்பாடு என்றெல்லாம் கல்லூரி வளாகங்களுக்குள் மாணவர்களின் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களது பிரச்சனைகளை, தேவைகளை வெளிப்படுத்தும் ஜனநாயக உரிமை என்பதே இல்லை. மாணவர் பேரவை போன்ற அமைப்புகளை அதற்குப் பயன்படுத்த முடியும். பல நிர்வாகங்கள் அதற்குத் தயாராக இல்லை. போராட்ட குணத்தை சரியான திசையில் இட்டுச் செல்லக்கூடிய மாணவர் அமைப்புகள் இதைச் செய்ய முடியும், ஆனால் பல நிர்வாகங்கள் மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் செயல்பட அனுமதிப்பதில்லை.

அரசியல், சமூகம், வீட்டு நிலைமைகள் என்று பல்வேறு கோணங்களில் அணுகப்பட வேண்டிய பிரச்சனை இது. கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஒரு ஆலோசகர் பதவி உருவாக்கப்படுவதால் மட்டும் இதைத் தீர்த்துவிட முடியாது. முதலில், பயிற்சி பெற்ற அத்தனை ஆலோசர்கள் இருக்கிறார்களா என்பதே கேள்விக்குறி.

அடுத்து, ஆசிரியர்களே கூட நிரந்தரமற்றவர்களாக, ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியம் என்று ஒரு சிறு தொகை பெறுகிறவர்களாகத்தான் பெரும்பாலான கல்லூரிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களால் எப்படி பிரச்சனைகளைக் கையாள முடியும்?

ஒரு முதல்வரின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதைக் கொஞ்சமும் நியாயப்படுத்துவதற்கில்லை. ஒருபோதும் அவரது உயிரை மீட்க முடியாது என்கிற சோகத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்.

அதே வேளையில் அவரையும் அந்த மாணவர்களையும் இப்படி பலியாக்குகிற கல்விக் கட்டமைப்பு, அரசியல் – பொருளாதார – சமுதாய அடிப்படை பற்றிய விவாதமாகவும், போராட்டமாகவும் விரித்துச் சென்றால்தான் தீர்வு காண முடியும்.

-தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு குழந்தை ஏசு பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் கொலை தொடர்பாக இன்று (அக்.12) காலை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ நிகழ்ச்சியில்
Kumaresan Asak

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்