கண்டனம்.. கண்டனம்.. கண்டனம்! -ம் விருதுகளை திரும்ப வாங்கிக்கங்க!- சாகித்ய அகாடமி கோரிக்கை

கண்டனம்.. கண்டனம்.. கண்டனம்! -ம்  விருதுகளை திரும்ப வாங்கிக்கங்க!- சாகித்ய அகாடமி கோரிக்கை

எழுத்தாளர் கல்புர்கி கொலைக்கு தங்களது கண்டனங்களை வெளியிட்டு தீர்மானம் நிறைவேற்றிய சாகித்ய அகாடமி, அது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. அத்துடன், சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்த எழுத்தாளர்கள் மீண்டும் விருதை எடுத்துக் கொள்ள சாகித்ய அகாடமி அதே தீர்மானத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.
acadamy oct 23
கன்னட எழுத்தாளர் கல்பர்கி படுகொலை மற்றும் தாத்ரி சம்பவத்தினை கண்டித்து இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 35 எழுத்தாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதினை திருப்பி அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சாகித்ய அகாடமி உரிய கண்டனம் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன் வைத்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க சாகித்ய அகாடமியின் அவசர கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. அகாடமியின் தலைவர் டாக்டர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் சுமார் இரண்டு மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.

2 மணிநேர கூட்டத்துக்குப் பிறகு அகாடமியின் செயற்குழு வாரிய உறுப்பினர் கிருஷ்ணசுவாமி நாச்சி முத்து கூறும்போது, “எழுத்தாளர் கல்புர்கி கொலையை அகாடமி கடுமையாக கண்டிக்கிறது. எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. கொலைகளைக் கண்டிப்பதில் அனைத்து எழுத்தாளர்களும் ஒருமனதாக நிற்கிறோம். பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போக்கையும் கண்டித்துள்ளோம், அந்த பிரச்சினையையும் எழுப்பியுள்ளோம். விரைவில் சாகித்ய அகாடமியின் அறிக்கை வெளியிடப்படும்” என்றார்.

‘அரசியல் சாசனம் உத்தரவாதம் அளிக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் எழுத்தாளர்களுடன் அகாடமி உடன் நிற்கவில்லை’ என்று குற்றம்சாட்டி சாகித்ய அகாடமியின் அனைத்து பதவிகளையும் துறந்த எழுத்தாளர் கே.சச்சிதானந்தன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முன்னதாக இன்று எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமியை நோக்கி ஒரு பேரணி நடத்த, அகாடமி விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்களைக் கண்டித்து இன்னொரு பேரணியும் நடைபெற்றது.இந்நிலையில்தான் எழுத்தாளர்களின் எதிர்ப்பில் சாகித்ய அகாடமி கடைசியாக தங்கள் ஒருமித்த ஆதரவை தெரிவித்து எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்துள்ளது.

Related Posts