எங்களுக்கு பென்ஷனா? – அமிதாப் & பேமிலி மறுப்பு!
ஏழ்மையில் வாடும் யாஷ் பாரதி விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 பென்ஷன் வழங்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்தது. இவ்விருதை பெற்ற அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் மற்றும் மகன் அபிஷேக் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ. 50,000 வழங்க முடிவு செய்தது.

உத்தரபிரதேச அரசின் மிக உயரிய கவுரவ விருதான இவ்விருது 1994 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சனுக்கு வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இவர்களின் மகனான அபிஷேக் பச்சனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இதனால் நலிவடைந்த விருதாளர்கள் பட்டியலில் இவர்கள் 3 பேரின் பெரும் சேர்க்கப் பட்டது.
இதனையடுத்து உத்தரபிரதேச முதல்வர் அகிலேசுக்கு அமிதாப் பச்சன் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “எங்கள் குடும்பத்திற்கு உத்தரபிரதேச அரசு அளித்துள்ள இந்த கவுரவத்தை மதிக்கிறேன். மாத பென்ஷனாக ரூ.50,000 கொடுக்க முடிவு செய்திருப்பதாக பத்திரிக்கைகளில் படித்தேன். இந்த தொகையை ஏதாவது சேவை திட்டத்திற்கோ அல்லது ஏழ்மையில் தவிக்கும் கலைஞர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


