உலகத்தின் அழிவு நாள் காப்பகத்தில் இருந்து முதன் முதலாய் சில விதைகளை எடுத்த தினம்!
உலகத்தின் அழிவு நாள் காப்பகத்தில் இருந்து முதன் முதலாய் சில விதைகளை எடுத்த தினம் போன திங்கள். என்னது உலக அழிவு – விதைகள் ஒண்ணுமே புரியலையே என்பவர்கள் மட்டும் மேலும் படிக்கவும்.

நம்ம தான் டிஜிட்டல் எக்கானமி / ரியல் எஸ்டேட்னு வெறும் கான்கிரீட் கட்டிடமா எழுப்பிகிட்டே இருக்கிற விவசாய நிலத்தை பாழ் பண்ணி அப்பூறம் பருப்பு 210 ரூவான்னு புலம்பல் வேற. இதெல்லாம் கணக்கில் கொண்டு உலகம் ஏதாவது ஒரு அழிந்து போனால் அல்லது பெரிய அளவில் ஏதாவது சேதம் வந்தால் சில பயிர்கள் சில தாவரங்கள் சில உணவு பொருட்களின் விதைகள் ./ பயிர்கள் / மூல பொருட்களை நார்த் போல் என்னும் ஆளில்லா பனிபாலைவத்தில் 1300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்வால்பார்ட் என்னும் நார்வேயின் தீவில் ஒரு கைவிடபட்ட வைர சுரங்கத்தில் 1980 பிராஜக்ட் ஆரம்பிக்கபட்டு 2005 ஆம் வருடம் உலகத்தின் அத்தனை தாவர வகை விதைகளையும் மைனஸ் 18ல் சேமித்து வைத்து இருந்தது அனேக பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.
வளரந்த நாடுகள் பல இதை ஃபன்டிங் முறையில் காப்பாற்றபட்டு இருந்த ஒன்றை நேற்று சமீபத்திய சிரியா போரினால் பாதிக்கப்பட்டு பல நேட்டிவிட்டி கிராப்கள் அழிந்து போனதால் நேற்று அந்த நாட்டில் எந்த எந்த வகை பயிர்கள் பயிரிடபட்டதோ அந்த விதையெல்லாம் எடுத்து திரும்பவும் சிரியாவில் பசுமை புரட்சிக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
மார்ஸ் / வின்வெளி எங்கு போனாலும் படிச்சவன் செய்ற முதல் வேலை தண்ணீர் இருக்கான்னு பார்த்திட்டு உடனே செயல் முறை விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறானுங்க ஆனா விவசாய நாடான நம்ம இன்னும் இதன் அருமையை உணராமல் விலை ஏறிடுச்சா கவலை இல்லை பாரின் பருப்பை இறக்குமதி செய்றோம் – விளங்கிடும்ம்ம்ம்ம்.
World’s Secret dooms Day Vault with drawl happened 19th oct for syria war rehabilation……


