32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 48)
மரபின் கரங்கள்,உயிர் காக்கும் வரங்கள்:பன்னாட்டு உலக பழங்குடியினர் தினம் 2026! Exclusive

மரபின் கரங்கள்,உயிர் காக்கும் வரங்கள்:பன்னாட்டு உலக பழங்குடியினர் தினம் 2026!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9 அன்று உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களின் தனித்துவமான கலாச்சாரம், உரிமைகள் மற்றும் அவர்களின் பரம்பரை அறிவைப் போற்றும் வகையில் ‘பன்னாட்டு உலக பழங்குடியினர் தினம்’ (International Day of the World’s Indigenous Peoples) கடைப்பிடிக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ கருப்பொருள் (Theme): “Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being” (பழங்குடி மருத்துவச்சிகளை கௌரவித்தல்: வாழ்வையும் நல்வாழ்வையும் பாதுகாத்தல்) என்பதாகும். 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி […]

August 9, 2026 admin
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்! Running News

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மகிழ்ச்சி, நகைச்சுவை, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் இனிமையான சூழல் நிறைந்த ஒரு முழுமையான திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் இந்த டிரெய்லர் அமைந்துள்ளது.இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படங்களில் ஒன்றாக அமையும் […]

August 9, 2026 admin
செயின்ட் லூயிஸ் :சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா! Exclusive

செயின்ட் லூயிஸ் :சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா!

அமெரிக்காவின் மிஸ்சூரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் (Grand Chess Tour) அமைப்பின் ‘2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ்’ (2026 Saint Louis Rapid & Blitz) செஸ் போட்டியில், இந்தியாவின் இளம் நட்சத்திர கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்தே புயல் வேகத்தில் புள்ளிகளைக் குவித்து வந்த பிரக்ஞானந்தா, ஒரு சுற்று மீதமிருக்கும்போதே சாம்பியன் பட்டத்தை […]

August 8, 2026 admin
சர்வதேச பூனைகள் தினம் 2026 கொண்டாட்டமும் சுவாரசிய உண்மைகளும்! Exclusive

சர்வதேச பூனைகள் தினம் 2026 கொண்டாட்டமும் சுவாரசிய உண்மைகளும்!

மனிதர்களுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்னிப்பிணைந்து வாழும் ஒரே செல்லப்பிராணி பூனைகள்தான். தன்னிச்சையான குணம், கம்பீரமான பார்வை, அன்பான சீண்டல்கள் என மனிதர்களின் மனதை மிக எளிதில் கொள்ளையடிக்கும் இந்த அதிசய உயிரினங்களுக்காகவே ஆண்டுதோறும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி உலக பூனைகள் தினம் (International Cat Day / World Cat Day) உலகெங்கிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  இன்று (ஆகஸ்ட் 8, 2026) இந்த சிறப்பான நாளை முன்னிட்டு பூனைகளின் வரலாறு, மனித குலத்துடனான அவற்றின் தொடர்பு, இந்த ஆண்டின் […]

August 8, 2026 admin
டிசி (DC) – சினிமா விமர்சனம்! Running News

டிசி (DC) – சினிமா விமர்சனம்!

கதை, திரைக்கதை, லாஜிக் என எதுவுமே இல்லாமல் லாரி லாரியாக டம்மி ரத்தங்களை ஊற்றி கோலிவுட்டைச் சீரழிக்கும் ஒரு மனநிலை பிறழ்ந்த ஜீவன் – இயக்குநர் என்று சொல்லிக்கொள்ளும் அருண் மாதேஸ்வரன், மற்றும் ‘வயலன்ஸ் வெறியன்’ என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் 2கே டைரக்டர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கைகோத்து, சன் பிக்சர்ஸ் தயவில் வழங்கியிருக்கும் மகா குரூரச் சினிமா இது என்றால் மிகையல்ல. அளப்பரிய அதிகாரம் கொண்ட காவல்துறையை டம்மி பீஸாகக் காட்டியிருப்பதுடன், காதுகூசும் அளவுக்கு இரட்டை அர்த்த […]

August 8, 2026 admin
ஏஐ உருவாக்கிய புதுவகை வைரஸ்:அதிர்ச்சியில் அறிவியல் உலகம்! Exclusive

ஏஐ உருவாக்கிய புதுவகை வைரஸ்:அதிர்ச்சியில் அறிவியல் உலகம்!

படங்கள் வரைவது, கட்டுரைகள் எழுதுவது, இசையமைப்பது என மனிதனின் படைப்பாற்றலுக்குத் துணையாக இருந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இப்போது உயிரினங்களின் மரபணுக் குறியீடுகளையே (DNA/RNA) புதிதாக எழுதத் தொடங்கிவிட்டது! ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் (Stanford University) மற்றும் ஆர்க் இன்ஸ்டிடியூட் (Arc Institute) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய இந்த அதிர்ச்சித் தரும் ஆய்வு, மருத்துவ உலகிற்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருந்தாலும், மறுபுறம் உலக மக்களுக்கு ஒரு மெல்லிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சி தரும் அறிவியல் உண்மை: என்ன […]

August 8, 2026 admin
வாழைப்பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது நல்லதா? மருத்துவ உண்மைகளும் ஆபத்துகளும்! Exclusive

வாழைப்பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது நல்லதா? மருத்துவ உண்மைகளும் ஆபத்துகளும்!

வாழைப்பழம் என்பது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்த மிகச் சிறந்த உடனடி ஆற்றல் தரும் இயற்கை உணவாகும். ஆனால், வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது அல்ல என்றும், அது பல செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவமும் நவீன மருத்துவ ஆராய்ச்சிகளும் எச்சரிக்கின்றன. இயற்கையான உணவுகளை உண்ணும் போது, அவற்றோடு சேரும் நீரின் தன்மை செரிமான மண்டலத்தில் எத்தகைய வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய விரிவான மருத்துவக் தகவல்களை […]

August 7, 2026 admin
’போட்டோகிராபர்’  -விமர்சனம்! Running News

’போட்டோகிராபர்’ -விமர்சனம்!

இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியை மையமாகக் கொண்டு ஒரு சாகசப் பயணத்தையும், தனிமனிதனின் உயிர் பிழைப்புக்கான போராட்டத்தையும் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறது ‘போட்டோகிராபர்’ திரைப்படம். ஒரு ஒளிப்படக் கலைஞனின் பயணத்தைக் கருவாக வைத்து, அதற்குள் மர்மம், அமானுஷ்யம் மற்றும் உளவியல் சார்ந்த விஷயங்களைக் கலந்து தந்திருக்கிறார் கதை நாயகனும் இயக்குநருமான அஷ்ரப். இருப்பினும், திரைக்கதையில் காணப்படும் மெத்தனமான நகர்வும், காட்சிகளில் உள்ள தெளிவின்மையும் முழுமையான சினிமா அனுபவத்தைத் தருவதில் பெரிய தடையை ஏற்படுத்தியுள்ளன. படக் கதை புகைப்படக் […]

August 7, 2026 admin
நெசவுத் தறிகளின் சத்தமும் சுதேசியின் முழக்கமும்: தேசிய கைத்தறி தினத்தின் சிறப்புப் பார்வை! Exclusive

நெசவுத் தறிகளின் சத்தமும் சுதேசியின் முழக்கமும்: தேசிய கைத்தறி தினத்தின் சிறப்புப் பார்வை!

இந்திய வரலாற்றில் ஒவ்வொரு தேதியும் ஒரு கதையைச் சொல்லும். ஆனால், ஆகஸ்ட் 7 ஆம் தேதி கதையை மட்டுமல்ல, நம் நாட்டின் சுயமரியாதையையும், இந்தியத் தொழிற்புரட்சியின் விதையையும் சுமந்து நிற்கும் ஒரு வரலாற்றுத் திருநாள். நம் நாட்டின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கைத்தறித் தொழிலும், பிரிட்டிஷ் ஆட்சியை உலுக்கிய சுதேசி இயக்கமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த அற்புதமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது இந்த நாள். சுதேசி இயக்கத்தின் தீப்பொறி பிறந்த நாள் 1905 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் […]

August 7, 2026 admin
நடைபாதை என்பது சலுகையல்ல, உரிமை! பாதசாரிகளுக்காக குரல் கொடுத்த சுப்ரீம் கோர்ட்!கண்டுகொள்ளாத அரசு! Exclusive

நடைபாதை என்பது சலுகையல்ல, உரிமை! பாதசாரிகளுக்காக குரல் கொடுத்த சுப்ரீம் கோர்ட்!கண்டுகொள்ளாத அரசு!

காலையிலேயே கிளம்பி வேலைக்கு ஓடும் எளிய மனிதன் முதல் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெரியவர்கள் வரை, இந்திய வாழ்க்கை முறையின் பிரிக்க முடியாத அங்கம் நடப்பது. கார்களும் இருசக்கர வாகனங்களும் பெருகாத காலத்தில், நமது ஊர்களும் தெருக்களும் மனிதர்களின் காலடிகளையே முதன்மையாக நம்பி வடிவமைக்கப்பட்டன. அதனால் தான் ‘இந்தியா என்பது நடப்பவர்களின் நாடு’ (India is a nation of walkers) என்று இன்றும் சொல்லப்படுகிறது. ஆனால், நவீன மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் என்ற பெயரில் கடந்த […]

August 7, 2026 admin
உடனடி செய்திகள்