32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2534)
பெங்களூரு டூ மும்பை சென்ற ஆம்னி பஸ்ஸில் தீ: 7 பேர் பலி Running News

பெங்களூரு டூ மும்பை சென்ற ஆம்னி பஸ்ஸில் தீ: 7 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து நேற்று இரவு சொகுசு பேருந்து ஒன்று மும்பைக்கு புறப்பட்டது. ஹவேரி அருகே அதிகாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பின் மீது நிலை தடுமாறி மோதியது. இதில் டீசல் டேங்க் வெடித்து பேருந்து முழுவதும் தீ பிடித்தது. இதனை உணர்ந்த பயணிகள் சிலர் பேருந்து கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு தப்பினர். ஆனால் தீயில் கருகி பயணிகள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 5ந் தேதி பெங்களூருவிலிருந்து ஐதராபாத் சென்ற […]

November 14, 2013 admin
ஊழல்வாதிகளின் கழுத்தில் கல்லை கட்டி கடலில் வீச வேண்டும்!- போப் பிரான்சிஸ் பரபரப்பு பேச்சு Running News

ஊழல்வாதிகளின் கழுத்தில் கல்லை கட்டி கடலில் வீச வேண்டும்!- போப் பிரான்சிஸ் பரபரப்பு பேச்சு

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் போப் ஆக இருந்த 16ஆம் பெனடிக்ட் பதவி விலகியதை அடுத்து, புதிய போப்பாக ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்த ஜார்ஜ் மோரியோ பெர்காக்லியோ தேர்வாகி. கடந்த மார்ச முதல் 266ஆவது போப்பாக பிரான்சிஸ் என்ற பெயருடன் அவர் பதவியேற்றுக் கொண்டார்.அந்த தலைமை பதவியேற்ற நாளில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகளையே கூறி வரும் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வாடிகன் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தோன்றி சொற்பொழிவு ஆற்றினார்.அப்போது அவர்,” ஊழல் செய்து பணம் சம்பாதித்து, அதனை தானமாக கொடுப்பவர்களும், […]

November 14, 2013 admin
தனது வீட்டை வெள்ளை மாளிகையாககிய  அமெரிக்க பிரஜை!வீடியோ Running News

தனது வீட்டை வெள்ளை மாளிகையாககிய அமெரிக்க பிரஜை!வீடியோ

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் லாங்வியூ என்ற இடத்தைச் சேர்ந்தவர் ரோன் வாடோ (63). இவருக்கு லாரா (36) என்ற மனைவியும், வாலன்டினா (16), லாரா (10) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக தனது வீட்டில் ரூ.1.5 கோடி செலவு செய்து ஒரு குட்டி வெள்ளை மாளிகை போல் மாற்றியுள்ளார்.இப்போது இதனை காண அமெரிக்கர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து ரோன் வாடோ கூறுகையில், “எனக்கு […]

November 14, 2013 admin
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேனான  சச்சினின் கடைசி ஆட்டம் இன்று ஆரம்பம்! Running News

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சினின் கடைசி ஆட்டம் இன்று ஆரம்பம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் வியாழக்கிழமை தொடங்குகிறது.இது சச்சினுக்கு 200-வது டெஸ்ட் போட்டியாகும். இப்போட்டியுடன் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். தங்களுள் ஒன்றாகக் கலந்து விட்ட சச்சினை, இப்போட்டியுடன் ஆடுகளங்களில் இனி காண முடியாது என்தே ரசிகர்கள் இப்போதே ஏங்க ஆரம்பித்து விட்டனர்.இந்நிலையில் சச்சினின் தீவிர ரசிகரான மனோஜ் திவாரி என்பவர் பீகாரின் கைமுர் மாவட்டத்தில் உள்ள அட்டர்வாலியா கிராமத்தில் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருக்கு கோயில் ஒன்றை […]

November 14, 2013 admin
மெரினா கலங்கரை விளக்கம்: இன்று முதல் மக்களுக்கு அனுமதி Running News

மெரினா கலங்கரை விளக்கம்: இன்று முதல் மக்களுக்கு அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில் 45 மீட்டர் உயரத்தில் 10 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நின்று சென்னை நகரின் தோற்றத்தையும், வங்கங்கடலில் எழும்பும் கடல் அலைகளையும், கப்பல்களின் பயணத்தை ரசித்து பார்ப்பபதே பரவசமான அனுபவம் இந்த நிலையில், கடந்த 1994ம் ஆண்டு முதல் பாதுகாப்பு கருதி கலங்கரை விளக்கத்தில் மக்கள் ஏறி பார்வையிட தடை விதிக்கப்பட்டது. சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு, நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல், மீண்டும் மெரினா கலங்கரை விளக்கம் புதுப்பொலிவுடன் […]

November 14, 2013 admin
சர்வதேச நீரழிவு தினம் – நவம்பர் 14 Running News

சர்வதேச நீரழிவு தினம் – நவம்பர் 14

மனித உயிருக்கே உலை வைக்கும் நோய்களில் ஒன்றான நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கு இன்சுலின் மருந்தை சார்லஜ் ஹெர்பர்ட் பெஸ்ட் என்பவருடன் இணைந்து கண்டுபிடித்த பிரெட்ரிக் பேண்டிங்கை கவுரபடுத்தும் விதமாக, அவரது பிறந்த தினமான நவ., 14, உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அமைப்பால் அறிவிக்கப்பட்டது. 2009 – 2013 வரை “டயபெட்ஸ் கல்வி மற்றும் தடுப்பது’ என்ற மையக்கருத்துடன் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதல் நிலை வகிக்கும் நிலையில் […]

November 14, 2013 admin
கற்பழிப்பை வரவேற்கலாம்  என்ற சி.பி.ஐ. இயக்குனர் மன்னிப்பு கோரினார் Running News

கற்பழிப்பை வரவேற்கலாம் என்ற சி.பி.ஐ. இயக்குனர் மன்னிப்பு கோரினார்

டெல்லியில் சி.பி.ஐ.யின் பொன் விழா மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா சூதாட்டம், கற்பழிப்பு, லாட்டரி மற்றும் கேளிக்கைகள் பற்றி பேசுகையில், “நீங்கள் பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் அதனை நீங்கள் விரும்பி வரவேற்பதாக அர்த்தம்.இதில் முறைகேடுகளை தடுக்க சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்.” என்றார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சிங்கா, செய்தியாளர்களிடம் தமது கருத்து தொடர்பாக வருத்தம் தெரிவித்தார். தாம் தெரிவித்த கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் […]

November 13, 2013 admin
பெண்கள் டாக்சி சேவை – கேரளாவில் தொடங்கப்படுகிறது Running News

பெண்கள் டாக்சி சேவை – கேரளாவில் தொடங்கப்படுகிறது

நாட்டின் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக விளங்கும் கேரளாவில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிலும் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய பெண்கள் டாக்சி சேவை 19ம் தேதி துவக்கப்படுகிறது. மாநில அரசின் சார்பில் துவக்கப்படும் இந்தத் திட்டத்தில் டாக்சி ஓட்டும் பெண்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். முதற்கட்டமாக 30 டாக்சிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் அதை 300 டாக்சிகளாக அதிகரிக்க […]

November 13, 2013 admin
நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையான ‘ராவண தேசம்’.-ஆல்பம் + டிரைலர் Running News

நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையான ‘ராவண தேசம்’.-ஆல்பம் + டிரைலர்

இலங்கை அகதிகளின் சோக கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையை சொல்லும் படம் ‘ராவண தேசம்’. இலங்கை அகதிகள் சிலர் இலங்கையில் இருந்து அகதிகளாக கப்பலில் மாதக் கணக்கில் பயணம் செய்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் வழிதவறி தாய்லாந்துக்கு சென்றதும். அந்த நாடு அவர்களை உள்ளே அனுமதிக்காததால் நடுக்கடலில் தவித்த அவர்கள் கொத்து கொத்தாக செத்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுத்திருக்கிறார்களாம். அஜெய் […]

November 13, 2013 admin
10 வகுப்பு + Fireman Training + Driving License வைத்திருபோருக்கு ONGC நிறுவனத்தில் பணி Running News

10 வகுப்பு + Fireman Training + Driving License வைத்திருபோருக்கு ONGC நிறுவனத்தில் பணி

Dehradun செயல்பட்டு வரும் Oil and Natural Gas Corporation limited (ONGC) நிறுவனத்தில் காலியாக உள்ள Asst Technician and Jr. Fireman பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 13 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: 01. Assistant Technician (Electronics) A2 Level – 08 வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: Electronics/ Telecom/ E&T Engineering பிரிவில் 3 வருட முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். […]

November 13, 2013 admin
உடனடி செய்திகள்