32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2536)
மலேஷியாவில் – உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலை வேணுமா? Running News

மலேஷியாவில் – உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலை வேணுமா?

மலேஷியாவில் – உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலைக்கு 2 – 10 ஆட்கள் உடனே தேவை. ரூபாய் 30,000 ++ தங்குமிடம் / சாப்பாடு / வாகனபோக்குவரத்து இலவசம். ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. இரண்டு – ஐந்து வருடம் வேலை கியாரன்டி. காப்புறுதியுடன். 5-10 வருடம் வேலை அனுபவம் இருந்தால் நல்லது. Email your resume to – anbupvm05@gmail.com Wanted Immly for Malaysia *************************************** Those […]

November 12, 2013 admin
நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது. Running News

நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. படேலின் கொள்கைகளுக்கு உண்மையான வாரிசு யார் என்ற விவாதத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு அரசியல் மற்றும் மதவாத கோஷங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. உண்மையில் நேருவும் படேலும் வெவ்வேறு தனித்தனியான கொள்கைகளை, தன்மைகளை, கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடு அடிப்படையானது. நவீன இந்தியாவை உருவாக்க காங்கிரசை கட்டுப்பாடுள்ள ஜனநாயக அமைப்பாக மாற்ற வேண்டியது அவசியம் என்று […]

November 12, 2013 admin
நேரு Vs படேல் அத்வானியின் அடுத்த ஆதார தகவல்! Running News

நேரு Vs படேல் அத்வானியின் அடுத்த ஆதார தகவல்!

நம் நாட்டின் முதல் பிரதமரான நேருவுக்கும் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலுக்கும் இடையே மோதல் இருந்தது என்பதை இப்போது மற்றொரு புத்தகத்தை சுட்டிக் காட்டி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மீண்டும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளார். . நாடு சுதந்திரம் அடைந்திருந்த காலகட்டத்தில் பல மாகாணங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சர்தார் படேல் மும்முரமாக இறங்கியிருந்தார். அப்போது ஐதராபாத் நிஜாம் தன் கட்டுப்பாட்டில் உள்ள ஐதராபாத்தை பாகிஸ்தானுடன் இணைக்க முற்பட்டார். இதை அறிந்த மத்திய அரசு அமைச்சரவை கூட்டத்தை […]

November 12, 2013 admin
‘கொக்கைன்’ மற்றும் ஹோமோ மோகத்தில் வளர்ந்தவர் ஒபாமா! Running News

‘கொக்கைன்’ மற்றும் ஹோமோ மோகத்தில் வளர்ந்தவர் ஒபாமா!

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,”பள்ளியில் படிக்கும் போது தன்னை ஒரு வெளிநாட்டு மாணவனாக வெளிப்படுத்துவதில் ஒபாமா அதிக ஆர்வம் காட்டினார்.அவருக்கு பெண்கள் மீது அதிகமான ஈடுபாடு இருந்தது கிடையாது. மாறாக, தன்னை விட அதிக வயதுடைய வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களிடம் அதிக தொடர்பு […]

November 12, 2013 admin
சரத்துடன் பிரியாமணி ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் “அஞ்சாத சண்டி” ஆலபம் Running News

சரத்துடன் பிரியாமணி ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் “அஞ்சாத சண்டி” ஆலபம்

ஓமிக்ஸ் கிரியேசன்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “அஞ்சாத சண்டி” என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிரியாமணி நடிக்கிறார்.மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி , கிருஷ்ணம்ராஜு, ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லண்டனைச் சேர்ந்த ஸ்கேர்லெட் வில்சன் என்ற பெண் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார்.அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. பிரியாமணி இந்த படத்தில் முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். அவருக்கு எல்லா விதமான சண்டை கற்றுத் தந்து ஒரு ஆணாதிக்க நபரான ஆசிஷ்வித்யார்த்தியை பழிவாங்க அனுப்பும் […]

November 12, 2013 admin
மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் ரத்து: சுப்ரீம் கோர்ட் உத்தரவு! Running News

மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் ரத்து: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்ரத்து செய்துள்ளது.மேலும், மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், 6 மாதத்திற்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கிட வேண்டும் என ஆணையிட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியில் 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 13 ஆயிரம் பேரையும் டிஸ்மிஸ் செய்தார் முதல்வர் ஜெயலலிதா. இதை எதிர்த்து தமிழ்நாடு […]

November 11, 2013 admin
கெஜ்ரிவாலின் கட்சிக்கு வரும் நன்கொடைகள் பற்றி விசாரணை ! Running News

கெஜ்ரிவாலின் கட்சிக்கு வரும் நன்கொடைகள் பற்றி விசாரணை !

“ஆம் ஆத்மி கட்சிக்கு வரும் நன்கொடைகள் அனைத்தும் வெளிப்படையானதே. இதனை எங்களது வலைதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அரசின் இந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கும் வரும் நிதிகள் குறித்தும் விசாரணை நடத்தவேண்டும்.”என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. அக்கட்சி வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதாக அரசுக்கு குற்றச்சாட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால், ஆம் […]

November 11, 2013 admin
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை ஹீனா சிந்துக்கு தங்கம்! Running News

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை ஹீனா சிந்துக்கு தங்கம்!

உலகின் டாப்-10 துப்பாக்கி சுடும் வீரார்கள் பங்கேற்கும் உலகக்கோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தகுதி பெற்ற இந்திய வீராங்கனை ஹீனா சிந்து, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்டார். நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் மொத்தம் 384 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியன் சோரனா அருணோவிக் (செர்பியா) 2 புள்ளிகள் பின்தங்கி வெள்ளிப் பதக்கமும், 381 […]

November 11, 2013 admin
தமிழக சட்டசபை நாளை மாலை அவசரமாக கூடுகிறது! Running News

தமிழக சட்டசபை நாளை மாலை அவசரமாக கூடுகிறது!

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை நாளை மாலை அவசரமாக கூடுகிறது. விசேஷமாக கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இலங்கையில் வரும் 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.இதனிடையே, “இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும்; பெயரளவிற்குக் […]

November 11, 2013 admin
சவூதி அரேபியாவில் கலவரம் : 2 பேர் பலி : 70-க்கும் மேற்பட்டோர் காயம Running News

சவூதி அரேபியாவில் கலவரம் : 2 பேர் பலி : 70-க்கும் மேற்பட்டோர் காயம

வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையால் சவூதி அரேபியாவின் ரியாத் பகுதியில் சனிக்கிழமை கலவரம் வெடித்தது.இதில் சவூதியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 561 பேர் கைது செய்யப்பட்டனர். சவூதி அரேபிய தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் உள்நாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நிதாகத் என்னும் சட்டத்தை அந்த நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.அவர்கள் நாடு திரும்ப 7 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்தக் கெடு கடந்த […]

November 11, 2013 admin
உடனடி செய்திகள்