32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2532)
அமெரிக்காவில் மருத்துவ ஜெனரலாகிறார் ஓர் இந்தியர்! Running News

அமெரிக்காவில் மருத்துவ ஜெனரலாகிறார் ஓர் இந்தியர்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மருத்துவ சட்டத்தை நடைமுறை படுத்தும் குழுவுக்கு தலைவராக அமெரிக்காவின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான இந்தியர் விவேக் எச். மூர்த்தி இருந்து வருகிறார். இந்த விவேக் எச். மூர்த்தியை அமெரிக்காவின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைத் துறையை ஒட்டுமொத்தமாக நிர்வகிக்கும் உயரிய பதவியில் ஒபாமா நியமிக்க திட்டமிட்டிருப்பதாக நேற்று அறிவித்தார். இவரது பரிந்துரையை செனட் சபை ஏற்ருக் கொண்டால் அமெரிக்க வரலாற்றிலேயே மிகச்சிறிய வயதில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணரான […]

November 16, 2013 admin
சர்வதேச ரோமிங் சிம் கார்ட் சென்னையில் சேல்ஸ்! Running News

சர்வதேச ரோமிங் சிம் கார்ட் சென்னையில் சேல்ஸ்!

ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயணம் செய்வோருக்கு உதவும் வகையில் சர்வதேச ரோமிங் சிம் கார்டை லைகா மொபைல் நிறுவனம் சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சிம் கார்டுக்கு வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. அத்துடன் வாழ்நாள் முழுவதும் இந்த சிம் கார்டுகளுக்கு வாடகை கிடையாது என்பதுடன் முன் பணம் செலுத்தத் தேவையில்லை என்பதும விசேஷ தகவல். இந்த சர்வதேச சிம் கார்டில் வாடிக்கையாளர்கள் செலுத்திவரும் கட்டணத்தைவிட 70 சதவீதம் முதல் 90 சதவீதம் […]

November 16, 2013 admin
சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16 Running News

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது. இன்றைய மக்களிடையே […]

November 16, 2013 admin
கையடக்க ரேடார் ஸ்கேனர் தயார்! Running News

கையடக்க ரேடார் ஸ்கேனர் தயார்!

ஒரு இடத்தில் இரு்நது மற்றொரு இடத்திற்கு எளிதாக எடு்ததுச் செல்லும் வகையில், கையடக்க ரேடார் ஸ்கேனர் ஒன்றை மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ரேடார் ஸ்கேனர் ஒளித்து வைக்கப்படும் வெடிபொருட்களை எளிதில் கண்டறியும் திறன் மிக்கவை. அதிலும் அதிகபட்சம் 25 மீட்டர் தொலைவில் உள்ள வெடிபொருட்களை இந்த ஸ்கேனர் மூலம் கண்டுபிடிக்கலாம். இது குறித்து பேராசிரியர் நிக் போரிங் கூறுகையில், ‘உலகை அமைதியான இடமாக மாற்ற இந்த புதிய தொழில்நுட்பம் மிகவும் உதவும். […]

November 16, 2013 admin
எஸ்.எம்.எஸ்.மணியார்டர் சர்வீஸ்  தமிழகத்தில் அமலானது! Running News

எஸ்.எம்.எஸ்.மணியார்டர் சர்வீஸ் தமிழகத்தில் அமலானது!

சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும், செல்போன் வழியிலான பணப் பரிமாற்றம் என்ற புதிய சேவையை இந்திய தபால் துறை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை தில்லி, பஞ்சாப், பிகார், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச் சேவை தற்போது தமிழகத்திலும் நடைமுறைக்கு வந்துள்ளது.முன்பெல்லாம் தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால், அந்த பணம் உரியருக்கு சென்றடைய […]

November 16, 2013 admin
பீர் பாட்டில்களின் மேல் இந்து தெய்வங்களின் உருவங்கள் நீக்கம்! Running News

பீர் பாட்டில்களின் மேல் இந்து தெய்வங்களின் உருவங்கள் நீக்கம்!

பீர் பாட்டில்களில் இந்து கடவுளர்களான விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் உருவங்களை லேபிள்களாகப் பதிந்து விற்பனை செய்து வந்த ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்த நிறுவனம் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், லேபிள்களை அகற்றுவதாகவும் கூறியது.இதையடுத்து இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்த ஆஸ்திரேலிய நிவேதா பகுதி இந்து அமைப்பைச் சேர்ந்த ராஜன் ஸேத் இது சரியான, வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று கூறினார்.இதற்காக, தங்களுக்கு உதவி புரிந்த, […]

November 15, 2013 admin
இன்று இரவு முதல் கனமழை! Running News

இன்று இரவு முதல் கனமழை!

“வங்கக்கடலில் நேற்று நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும். இதன் காரணமாக 48 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிக கன மழையோ, கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது.”என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

November 15, 2013 admin
கழுத்து வலியும் அதை களையும் வழியும்! Running News

கழுத்து வலியும் அதை களையும் வழியும்!

நிமிடத்திற்கு நிமிடம் வேகமான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தற்போதைய உலகில் பெரும்பாலான மக்களுக்கு கழுத்திலும், முதுகிலும் வலி ஏற்படுகிறது. அதிலும் சுமார் 70 சதவீத மக்கள் அடிக்கடியோ அல்லது அவ்வப்போதோ இந்த வலியினால் அவதியுறுகின்றனர்.நம் முன்னோர்கள் எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்ற சித்தர்களின் முதுமொழியை அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கலாம். உண்மையில் மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் […]

November 15, 2013 admin
சச்சின் .. சச்சின் -செஞ்சுரியை தவற விட்ட சச்சின்! Running News

சச்சின் .. சச்சின் -செஞ்சுரியை தவற விட்ட சச்சின்!

தனது 200 -வதுகடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் முதல் இன்னிங்சில் 74 ரன்களுக்கு டியோரியா பந்தில், சமியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 117 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் சச்சின் 74 ரன்களை அடித்தார். இதையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் சச்சின் மொத்தம் 15,921 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இரண்டாம் நாள் […]

November 15, 2013 admin
கழிவுகளை அழித்து மனித குலத்தை காப்போம்! Running News

கழிவுகளை அழித்து மனித குலத்தை காப்போம்!

கழிவு என்பது எல்லா இடங்களிலும் எல்லோராலும் உருவாக்கப்படுவதே. நகரங்களில் மீதமாகும் கழிவுகளுக்கு வடிகாலாக கிராமங்களை மாற்றிவிடுவது என்பது இயற்கையின் சமநிலையை பாதிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்றாகும்.தற்போது வேகமாக மாறிவரும் கலாசார மாற்றங்களினால் புதியன புகுதலும் பழையன கழிதலும் சாதாரணமான நிகழ்வு என்றாலும்கூட பழையவற்றை சுற்றுச்சூழல் மாசுபடாமல் கழிப்பதை மனித சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சுற்றுச்சூழல் மிகப்பெரிய பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும். முந்தைய காலங்களில் கழிவுகளை ஒரு குழி வெட்டி அதில் கொட்டி அது மக்கியபின் விவசாயத்திற்குப் […]

November 15, 2013 admin
உடனடி செய்திகள்