பெண்கள் டாக்சி சேவை – கேரளாவில் தொடங்கப்படுகிறது

பெண்கள் டாக்சி சேவை – கேரளாவில் தொடங்கப்படுகிறது

நாட்டின் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக விளங்கும் கேரளாவில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிலும் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய பெண்கள் டாக்சி சேவை 19ம் தேதி துவக்கப்படுகிறது. மாநில அரசின் சார்பில் துவக்கப்படும் இந்தத் திட்டத்தில் டாக்சி ஓட்டும் பெண்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.
nov 13 - -SHE-TAXI_-
முதற்கட்டமாக 30 டாக்சிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நடப்பு ஆண்டு இறுதிக்குள் அதை 300 டாக்சிகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு பெண்கள் எளிதாக ஓட்டும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது மாருதி கார்கள், இதில் ஈடுபடுத்தப்படும். காரில் ஆபத்து காலத்தில் எச்சரிக்கை செய்யும் கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை இருக்கும்.

அத்துடன் முழுவதும் ‘கால் சென்டர்’ முறையில் இந்தச் சேவை இருக்கும் என்பதால், தெருவோரங்களில் அல்லது சாலையோரங்களில் பெண் டிரைவர்கள் சவாரிக்காக காத்திருக்கத் தேவையில்லை. மாதத்தின் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் இந்த சேவை இருக்கும். பெண் டிரைவர்களை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. இந்த தொழிலை விரும்பும் பெண்களுக்கு கார் வாங்க கடனும் அளிக்கப்பட உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

Maiden run of ‘She Taxi’ – 24×7 Women Taxi in Trivandrum
*****************************************************************************
She Taxi, a 24×7 taxi service for women and run by women, is all set to roll out in Trivandrum city by the end of November 2013. A first-of-its kind initiative in the state, She Taxi will be driven by women exclusively for women passengers. The project, aimed to provide a safe and women-friendly passenger cab system, is implementing as a program of the Gender Park, Kozhikode, under Social Welfare department with the support of city traffic police and transport commissionerate.

error: Content is protected !!