விட்னஸ் (2022) – விமர்சனம்!

விட்னஸ் (2022) –  விமர்சனம்!

ரு பெரிய Research paper’ர யதார்த்த திரைக்கதையா மாத்தி இருக்காங்க. ஆனா எங்கயும் போர் அடிக்கலை, டாக்குமெண்டரி உணர்வையும் தரலை…!

தன் மகனோட மலக்குழி மரணத்திற்கு அன்னை நீதிகேக்குற ஒரு Court room Drama’ல, கொஞ்சம் குடிசை மாற்று வாரியம் பத்தியும், கொஞ்சம் மேல்தட்டு மக்கள் மத்தியில இருக்க சாதி வேற்றுமைகளை பத்தியும் கலந்து சொல்லி இருக்காங்க. படத்தோட Technical அம்சங்கள் என்னை ரொம்ப கவர்ந்தது. படம் முழுக்கவே Standard lens’ல, Available lighting’ல, சராசரி Eyelevel’லேயே மொத்த படத்தையும் படம் பிடிச்சிருந்தாங்க, படத்தோட Tone’னுக்காக மட்டுமே கொஞ்சமா DI உபயோகிச்சு இருந்தாங்க. எடிட்டிங் & Sound இலாக்கா ரெண்டும் போட்டி போட்டு வேல பாத்திருந்தாங்க.

Title card ஆரமிச்சி, மொத்த படத்தோட Mood’அ செட் பண்றதே பின்னணில ஒலிக்கிற சப்தங்கள் தான், பல இடங்கள்ல அந்த பின்னணி சப்தத்தை மெருகேத்த தான் பின்னணி இசையவே உபயோகிச்சு இருந்தாங்க. அந்த சப்தங்களும் அதுக்கான இசைக்கோர்வையும் எடிட்டிங் வெட்டுகளை வெச்சி தான் நகருது. சமயத்துல பாட்டு எது BGM எதுன்னு குழம்புற அளவுக்கு அவ்ளோ Smooth’ஆ இருந்தது Mixing, Dubbing வாய்ஸ் கூட Sync sound போல அவ்ளோ நேர்தியா ஒலிச்சது, பட்ஜெட்டை மீறின Masterful work. வசனங்கள் கூர்மை.

கிளைமாக்ஸ் நெருக்கத்துல court கட்சிகளுக்கு இடையிடையே சேர்க்கப்பட்ட Montage கட்சிகளும் படத்தை லைவா வெச்சிருந்தது. அதுக்கு பெரிதும் கை கொடுத்தது ரோஹிணியோட அருமையான நடிப்பு, அவங்களோட slangல இருந்த நேர்த்தி பிரம்மிப்பு. தோழர் கதாபாத்திரம் பண்ணவர், வக்கீல் கதாபாத்திரம் பண்ண சண்முகராஜன் தொடங்கி அத்தனை நடிகர் பட்டாளமும் நேர்தியா நடிச்சிருந்தாங்க. ஜட்ஜ்ஆ வந்த பெரியவர்’க்கு ஸ்பெஷல் பூங்கொத்து. ஷ்ரத்தா ஸ்ரீநாத்க்கு இடைச்சிறுகள் கதாபாத்திரம்தான்னாலும் பெருசா உறுத்தலை.

மலக்குழி மரணத்தை பற்றிய படமா இருந்தாலும், மனிதன் மலக்குழில இறங்குறமாதிரியான ஒரு கட்சிய கூட படத்துல சேர்க்காத கண்ணியம், கைல இருக்க டேட்டாகளை வசன திணிப்பாக இல்லாம ரொம்ப இயல்பா படத்துல வெச்சி தினசரி நாம கண்டுக்காம கடந்துபோற உண்மைகளை உரக்க சொன்னது தொடங்கி பல இடங்கள்ல கைத்தட்டு வாங்குற படம், கிளைமாக்ஸ் நெருக்கத்துல ரோஹிணி vs Supervisor சண்டை, ஷ்ரத்தாவோட அப்பாவோட கதைன்னு ட்ராமாகாக சேர்த்த விஷயங்களால கொஞ்சம் ட்ராக் மாறின உணர்வு, கிளைமாக்ஸ் 50-50 தான்.

மெதுவான திரைக்கதையை பொறுத்திகிட்டா ஒரு நல்ல படம் பார்த்த உணர்வை கொடுக்கும் #Witness.

சந்தோஷ் கமல்ராஜ்

error: Content is protected !!