வதந்தி :வெலோனியின் கட்டுக்கதை – வெப் சீரிஸ் விமர்சனம்!

வதந்தி :வெலோனியின் கட்டுக்கதை – வெப் சீரிஸ் விமர்சனம்!

மிழ் சினிமாவில் துப்பறியும் படங்கள் எக்கச்சக்கமாக வந்துள்ளன. அத்தகைய படங்களைப் பார்ப்பதற்கென்றே ஒரு தனி ஆர்வம் ஏற்படும். அடுத்து என்ன அடுத்து என்னவாகும் என ஒரு பரபரப்புடனேயே படம் முழுவதையும் பார்க்கத் தூண்டிவிடும் அந்த ஆவல். அதை குறிப்பறிந்து தமிழில் துப்பறியும் நாவல்களை எழுதியவர்கள் வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், தேவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழ்த்திரைப்படங்கள் பிரபலமடைந்த பின்னர் துப்பறியும் காவல் துறை அதிகாரி பாத்திரம் பல படங்களில் பயன்படுத்தப்பட்ட கதை எல்லாம் தனி எனிசோட்.. . இந்த துப்பறியும் பாணியில் புது டைப்பிலான வெப் சீரிஸ் ஒன்று ‘வதந்தி’ என்ற பெயரில் வந்து கவர முயற்சித்து இருக்கிறது..!

இந்த சீரிஸின் கதை என்னவென்றால் ஒரு படத்தின் நாயகி கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்கில் ஷூட்டிங் நடக்கும் ஒரு நாளில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். மீடியாவில் இந்த செய்தி வேகமாக பரவுகிறது. ஆனால் பிறிதொரு நாள் இறந்த பெண் மீடியாவில் தோன்றி நான் இறக்கவில்லை உயிருடந்தான் இருக்கிறேன் என்கிறார். அப்படியானால் கொலை செய்யப்பட்டது யார் என போலீஸ் விசாரணை செய்கிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகான இளம் பெண் வேலோனி தான் படுகொலை செய்யப்பட்ட பெண் என கண்டு பிடிக்கிறது காவல் துறை. ஆனால் ஏனிந்த கொலை என்று எந்தவித துப்பும் கிடைக்காமல் பல மர்மங்கள் நிறைந்த பாதையில் பயணிக்கும் விசாரணையை ஒரு கட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் கை விட்டு விடுகிறார்கள். ஆனால், அந்த முடிவை ஏற்க மறுக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனி ஒரு நபராக உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்க, கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சொல்வது தான் ’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’.

மெயின் ரோலில் வரும் எஸ்ஜே சூர்யா வழக்கம் போல நடிப்பில் வாவ் சொல்ல வைத்து இருக்கிறார். கொலையை அவர் துப்பறியும் பாணி ரசிக்க வைக்கிறது. குறிப்பாக தான் எடுத்துக்கொண்ட வழக்கை முடிக்க முடியாமல் தவிப்பது, அதே சமயம் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க போராடுவது, அதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மனைவியிடம் புலம்புவது என்று அசத்தி இருக்கிறார்.

ஹீரோயின் லெவலில் நடித்திருக்கும் அறிமுக நடிகை சஞ்சனா, வெலோனி என்ற கதாபாத்திரம் எப்படிப்பட்ட பெண் என்பதை யூகிக்க முடியாதபடி நடித்திருக்கிறார். அவருடைய வசன உச்சரிப்பு, அவர் மற்றவர்களிடம் பழகுவது, என்று வெலோனியோ குறித்து பரவும் வதந்திகள் உண்மையா? பொய்யா? என்பதை யூகிக்க முடியாதபடி மிக இயல்பாக நடித்திருக்கிறார். வெலோனியின் அம்மா வேடத்தில் நடித்திருக்கும் லைலா, ஆங்கிலோ இந்தியன் பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி போய் விடுகிறார். எஸ்.ஐ வேடத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, கன்னியாக்குமரி மாவட்ட தமிழை உச்சரிக்கும் விதம் மற்றும் இயல்பான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார். . எழுத்தாளராக நாசர் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக உள்ளார். அதாவது தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

ஒரு கத சொல்லட்டா புகழ் புஷ்கர்– காயத்ரி ஆகியோரின் சுழல் தயாரிப்பின் ஹிட்-டை அடுத்து, ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது இந்த இணையத் தொடர்.. . நமது நாட்டில் ஒரு பெண் அதுவும் அழகான பெண்ணாக இருந்து மர்மமான முறையில் இறந்து போனால் நமது நாட்டு மீடியாகளில் சில இந்த மரணத்திற்கு பின் உள்ள உண்மையை கண்டு பிடிக்கிறோம் என்ற பெயரில் இறந்த பெண்ணை பற்றி பல தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் இறந்த பெண்ணின் பெயருக்கும், அவரது குடும்பத்திற்கும் களங்கம் ஏற்படுகிறது. அதாவது பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்களின் நற்பெயரை படுகொலை( character assasination ) செய்வது என்பது நம் நாட்டில் சாதாரணமாக நடைபெறும் தவறை மைய்யமாக வைத்து உருவான வதந்தி- வேலோனியின் கட்டுக்கதையின் முதல் நான்கு பாகங்கள் நம்மை சீட் நுணியில் உட்கார வைத்தாலும், அதன் பிறகு வரும் மீதமுள்ள நான்கு பாகங்கள் நம் பொறுமையை சற்று சோதிக்கிறது. அத்துடன் ஓடிடி -க்கு சென்சார் கிடையாது என்பதை அட்வாண்டேஜாக எடுத்துக் கொண்டு உபயோகிக்கும் சொல்லாடல்கள் -என்னதான் போஸ்டரில் A  என்று குறிப்பிட்டிருந்தாலும்  நெருடுகின்றன

ஆனாலும் சரவணன் ராமசாமியின் கேமரா கண்களால் அறுசுவை படைத்திருக்கிறார். சைமன் கே கிங் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. கதையோடு பயணித்து நாம் செல்ல பின்னணி இசை கைகொடுத்திருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் படமாக்கியது மட்டுமின்றி, வட்டார வழக்கை மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள். அதற்கு உதவிய வசனகர்த்தா ரிச்சர்ட் கெவினுக்கு சபாஷ்.

மொத்தத்தில் ஒரு கொலை வழக்கில் தனி கவனம் பெற வேண்டுமென்பதற்காக ஒரு நடிகையையையும் ,கூடவே ஓர் அரசியல்தலைவரையும் கோர்த்து பின்னப்பட்ட தொடரில் கத்திரிக்கு கொஞ்சம் வேலை கொடுத்திருந்தால் கவனம் ஈர்த்திருக்கும்

Related Posts

error: Content is protected !!