உடன்பிறப்பே – விமர்சனம்!

உடன்பிறப்பே – விமர்சனம்!

ந்த தமிழ் சினிமா எத்தனையோ உறவுமுறைகளைக் கொண்டு கதைகளை பார்த்து இருந்தாலும் இவைகளில் அண்ணன் – தங்கையின் அன்பு, பாசம் & மோதல் பற்றிய திரைக்கதைகளின் எண்ணிக்கை சில ஆயிரத்தைத் தாண்டும். சிவாஜியின் பாசமலர், எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன், ரஜினியின் 6ல் இருந்து 60 வரை, நான் சிகப்பு மனிதன், அண்ணன் தங்கை பாசத்தின் புதிய பரிமாணத்தை உணர்த்திய சின்னத்தம்பி, பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே…விஜய் நடித்த திருப்பாச்சி. வேலாயுதம், அஜித்தின் திருப்பாச்சி என்று நீண்டுக் கொண்டே போகும் பட்டியலில் புதுசாக இணைய முயன்றிருப்பதுதான் ஜோதிகாவின் உடன் பிறப்பே..!

கதை என்னவென்றால் சசிகுமார் தங்கை ஜோதிகா. வழக்கம் போல் கண்மூடித்தனமான அன்பால் கண்டுண்டிருக்கும் இவர்களை பிரிக்க விதி சதி செய்கிறது. அதாவது ஜோதிகாவிற்கும் சமுத்திரகனிக்கும் திருமணம் நடக்கிறது. அதனால் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் சமுத்திரகனி, சசிகுமார் அடிக்கடி கிளப்பும் அடிதடிப்பிரச்சனைப் போக்கு பிடிக்காமல் ஜோதிகாவை அழைத்து தனிக்குடித்தனம் சென்று விடுகிறார். இதனால், அண்ணன் சசிகுமாரும், தங்கை ஜோதிகாவும் பிரிந்து பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறார்கள். இறுதியில் இரண்டு குடும்பமும் எப்படி சேர்ந்தது? என்பதே இந்த உ.பி..

கோலிவுட்டில் அழகு, திறமை,ஆளுமைப் பண்புகள் என அனைத்துக்காகவும் ரசிகர்களின் பேரன்பையும் மரியாதையையும் பெற்றிருப்பவருமான நடிகை ஜோதிகாவின் 50-வது படமிது.. பேரழகன்’, ‘சந்திரமுகி’, ‘மொழி’ ஆகிய படங்களில் நடித்ததற்காக மூன்று முறை தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றிருக்கும் ஜோ தனது அரை செஞ்சுரியான உடன்பிறப்பே-யில் தனக்கே உரிய உதடுகள் மடித்து, வெடித்து, அழகுக் காட்டி, அழுது பலவித பரிணாமத்தைக் காட்டி மனதில் நிற்கிறார்.

அண்ணன் சசிகுமார் அதே தாடி, அதே குட்டியூண்டு புன்முறுவல், அதே மாடுலேசனில் தனக்கு என்ன வருமோ அதை வழங்கி இருக்கிறார். பேசியே பேர் வாங்கிய சமுத்திரக்கனியை இயக்குநர் சரவணன் அடக்கி ஆண்டு புது கனியைக் கொண்டு வந்துள்ளார். சட்டம்டா.. நீதிடா.,நேர்மைடா என்ற விசயத்தை கடைசி வரை விடாத அவரின் கேரக்டர் ரசிக்கவே வைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சூரிக்கு ஏற்ற ரோல் கிடைத்திருப்பதைப் புரிந்த அதகளம் செய்திருக்கிறார்.

சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சிஜாரோஸ், ஆடுகளம் நரேன், நிவேதிதா சதீஷ், வேல்ராஜ், வேல ராமமூர்த்தி, தீபா, சித்தார்த் என கமிட் ஆன அனைவரும் தங்களுக்கான பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள். இதில் கலையரசன், கேரக்டர் ஒட்டவில்லை என்றாலும் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். இசை அமைத்துள்ள இமான் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அதே சமயம் கேமராமேன் வேல்ராஜ் நேட்டிவிட்டியை பக்காவாக கண் முன் வந்து காட்டுவதில் தனிக் கவனம் பெறுகிறார்.

நம்ம பத்திரிகைக் குடும்பத்தில் இருந்து இயக்குநரான கத்துக்குட்டி இயக்குநர் சரவணன் எடுத்துக் கொண்டதென்னவோ அண்ணன் தங்கை சென்டிமென்ட்தான் என்றாலும் சின்னத்திரையில் அன்றாடம் வரும் ஏகப்பட்ட சீரியல்களுக்கு போட்டியாக இல்லாமல் சமூக அக்கறையுடன் பல விஷயங்களை – குறிப்பாக தாலி செண்டிமெண்ட் வரை அநாயசமாக அலசி கூடவே பொழுதுபோக்கு சினிமாவாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.. அதற்கே அவருக்கு ஒரு பொக்கேந் பார்சல் ஆர்டர் செய்யலாம்

மொத்தத்தில் ஓடிடியில் குடுபத்தோடுப் பார்க்கத் தகுந்த படமிது!

மார்க் 3/5

Related Posts

error: Content is protected !!