ரயில்வே ஸ்டேஷன்களில் வழங்கு வந்த இலவச வைபை இனி கிடையாது! கூகுள் அறிவிப்பு

ரயில்வே ஸ்டேஷன்களில் வழங்கு வந்த இலவச வைபை இனி கிடையாது! கூகுள் அறிவிப்பு

இந்தியாவின் 400 ரயில்வே ஸ்டேஷன்களில் அளிக்கப்பட்ட இலவச வைபை வசதியை நிறுத்திக் கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல நிறுவனமான கூகுள் 2015 ல் பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயின் தொழில்நுட்ப பிரிவான ரயில்டெல்லுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி இந்தியாவில் உள்ள 400 முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் இலவச வைபை வழங்கும் திட்டத்தை மேற்கொள்வதாகஅறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த திட்டம் தற்போது வரை செயல்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இலவச வைபை திட்டத்தை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் துணை தலைவர்களில் ஒருவரான சீசர் சென்குப்தா கூறுகையில், உலக அளவில் மொபைல் டேட்டாவின் விலையானது ஒரு ஜிபிக்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. மொபைல் இணைப்பு உலகளவில் மேம்பட்டு வருகிறது. மொபைல் டேட்டாவை பயன்படுத்துவம் எளிதாக உள்ளது.

இந்தியாவில் ஒரு மாதத்திற்கு ஒருவர் சராசரியாக 10 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவது டிராய் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே தற்போது இந்தியாவில் 400 ரயில்வே நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வைபை வசதியை நிறுத்திக் கொள்ள உள்ளோம்.

கூகுள் ஸ்டேஷன் திட்டம் 2020 ஆம் ஆண்டில் உலகளவில் மூடப்படும். இந்தியாவில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ​​இந்தியாவைத் தவிர, பிரேசில், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் போன்ற வேறு சில நாடுகளிலும் இலவச வைபை அளித்து வந்தோம்.

தற்போது அத்தனையும் படிப்படியாக நிறுத்திக் கொள்ள உள்ளோம். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கூகுள் தொழில்நுட்ப உதவியுடன் நியமிக்கப்பட்ட 415 நிலையங்கள் உட்பட 5,600 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் தனது இலவச வைபை சேவையை தொடர்ந்து வழங்குவதாக ரயில்டெல் தெரிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!