டெஸ்ட் – விமர்சனம்!

டெஸ்ட் – விமர்சனம்!

கோலிவுட் சினிமாவில் கிரிக்கெட் பின்னணியில் அவ்வப்போது சில படங்கள் “சென்னை 28”, “ஜீவா”, “கனா” மற்றும் “லப்பர் பந்து” என்று வந்த நிலையில் கொஞ்சம் மாற்றி கிரிக்கெட் சூதாட்டம்ம் ஃபேமிலி செண்டிமெண்ட், ஃப்ரண்ட்ஷிப் மற்றும் வழக்கம் போல் காதல் என்று வலை பின்னி டெஸ்ட் என்ற பெயரில் நேஈடியாக நெட் ஃபிக்ஸில் வழங்கி உள்ளார்கள்.சசிகாந்த் என்பவர் முதல் முறையாக டைரக்ட் செய்துள்ள இதில் ஆர். மாதவன், நயன்தாரா, மற்றும் சித்தார்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கதை என்னவென்றால் இந்திய கிரிக்கெட் வீரரான சித்தார்த் சில மேட்ச்களில் சொதப்பியதால் கிரிக்கெட் போர்ட் அவரை ரிட்டயர்ட் பெற சொல்கிறது. மேலும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சில் மட்டும் இறுதியாக கலந்துகொள்ளுமாறு சொல்கிறது வாரியம். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் சித்தார்த். அதே சமயம் அவரது பள்ளித் தோழியும் ஆசிரியையுமான குமுதா (நயன்தாரா), குழந்தையின்மையால் மனம் உடைந்து, தன் கணவன் சரவணனோடு (மாதவன்) கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கான IVF சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது. இதனிடையே விஞ்ஞானியாக இருக்கும் மாதவன் தண்ணீர் மூலம் வாகனம் ஓட்டும் கருவி ஒன்றை கண்டு பிடிக்கிறார். இதற்கு அங்கீகாரம் கேட்டு அரசை அணுகும் போது ஐந்து கோடி வரை லஞ்சம் கேட்கிறார்கள். இந்த பணத்தை சம்பாதிக்க சித்தார்த் மகனை கடத்தி வைத்து கொண்டு, மேட்ச் பிக்சிங் செய்யும் நபருடன் இணைந்து, சித்தார்திடம் மேட்சில் தோற்கும் படி பிளாக் மெயில் செய்கிறார். இம்மூன்று கேரக்டர்ளையும் மேலே சொன்ன கிரிக்கெட் போட்டி, இவர்களைஒரே புள்ளியில் சந்திக்க வைத்து மிகப்பெரிய சோதனையில் சிக்க வைக்கிறது. அது என்னவென்பதே ‘டெஸ்ட்’!

இக்கதையில் முக்கிய ரோல்களில் வரும் நயன்தாரா – மாதவனின் நடிப்பு ஆஹா..ஓஹோ.. பேஷ்.. பேஷ் சொல் வைத்து விடுகிறது.தன் திறமைக்கு எங்கேயும் அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்று ஏங்கும் நபராக மாதவனும், குழந்தை வேண்டி தவிக்கும் ஒரு மிடில் கிளால் வுமானாக நயன்தாராவும் கணவன் – மனைவியாக வாழ்ந்து காட்டி அசத்தி ஆரம்பித்தவர்கள் ஒரு கட்டத்தில் கேரக்டரின் வலுவை குறைத்து விட்டார்கள். இமேஜ் என்பது வாழ்க்கை. அந்த வாழ்க்கை தன் ஆட்டத்தில்தான் இருக்கிறது என்பதை உணர வைப்பத்தில் கவனம் செலுத்த தவறிவிட்ட சித்தார்த்தும், உப்புக்கு சப்பாணியாக ரீ என்ட்ரி கி இருக்கும் மீரா ஜாஸ்மினும் இன்னும் கொஞ்சம் தங்கள் கேரக்டர்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவர்களெல்லாம் பாஸ் மார்க் வாங்கி விடுகிரார்கள்.

மியூசிக் டைரக்டர் சக்திஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே என்றாலும் காதில் விழுந்த ஹம் மனதில் பதியவில்லை. கேமராமேன்
விரஜ் சிங் கோஹிலின் ஒளிப்பதிவால் டெஸ்ட் ஒரு ஸ்டெப் முன்னேறி போய் விடுகிறது. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளை காட்சிப்படுத்திய விதம், சினிமாத்தனமாக அல்லாமல் நிஜ கிரிக்கெட் போட்டியை பார்க்கும் உணர்வை கொடுத்திருக்கிறார்.

தமிழில் யாரும் அலசாத சப்ஜெக்டான சயன்ஸ், மெடிக்கல், மட்டுமின்றி ஸ்போர்ட்ஸ் என மூன்று மெஹா ஃபீல்டுகளையும் ஆராய்ந்து ர் இந்த படத்துக்காக எழுதி இருக்கும் கதை சுவையாகவே இருக்கிறது. அதிலும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து இப்படத்தில் சொல்லும் சேதிகள் எல்லாம் அட சொல்ல வைத்து விடுகிறது..!
ஆனால் இப்படி பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்காக அமைந்தும் ரசிக்க வைக்க வேண்டிய திரைக்கதை என்னும் பில்டிங்கை சுவாரஸ்யப்படுத்த தவறிவிட்டதாலும் , டயலாக்குகளில் கூட போதிய கவனம் செலுத்தாததாலும் இதுவும் ஒரு ஆர்டினரி சினிமா டெஸ்ட் மேட்ச் ஆகிவிட்டது.

மார்க் 2.5/5

error: Content is protected !!