டாஸ்மாக் – மூடப்பட்ட கடைகளும், நடைமுறை உண்மையும்!

டாஸ்மாக் – மூடப்பட்ட கடைகளும், நடைமுறை உண்மையும்!

மிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளில் 500 கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளது…முதலமைச்சர்களாக இருந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இதற்கு முன்பே தலா 500 மதுபான கடைகளை மூடியுள்ளனர். 1000 மதுபான கடைகள் மூடப்பட்டும் தமிழ்நாடு அரசின் மது வருவாயில் குறைவு ஏற்படவில்லை. மாறாக, வருவாய் அதிகரித்துதான் செல்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 5, 329 மதுபானக் கடைகள் இருந்த நிலையில், 500 கடைகளை மூடும் அரசின் அறிவிப்பு மூலம் இந்த எண்ணிக்கை 4,829 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு 500 கடைகளை மூடுவதன் நடைமுறை உண்மையே வேற.

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 7, 500 சொச்சம் கடைகள்..

டாஸ்மாக் மொத்த விற்பனை 3500- 4000 கோடி வரை.

500 கடைகள் குறைப்பு 500 கடைகள் குறைப்பு என குறைத்து இப்போது 4800+ கடைகள் .

விற்பனை, 44 ஆயிரம் கோடி.

எதிர்காலத்தில் ஆயிரம் கடைகள் மட்டுமே இருந்தாலும், கண்டிப்பாக 60 ஆயிரம் கோடிக்கு விற்கும்.

கடைகளை குறைப்பார்கள். அதன் மூலம் எஞ்சியிருக்கும் கடைகளில் இன்னும் கூட்டம் அதிகமாகும். அதை பேசுபொருள் ஆக்குவார்கள். எந்த மாநிலத்திலும் இந்த மாதிரி கேவல புத்தி கிடையவே கிடையாது.

சென்னையின் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத புதுச்சேரி நகரில் எத்தனை நூறு கடைகள் என்று கேட்டுப்பாருங்கள். பெரும்பாலான கடைகளில் பெரும்பாலான நேரங்களில் கூட்டமே இருக்காது. ஒயின் ஷாப் பக்கத்தில் பாட்டில்களை திறக்கும் குடிமகன்களை பார்க்க முடியாது.

எல்லாக் கடைகளிலும் எல்லா பிராண்டுகளிலும் மது வகைகள் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் அன்றைய தினம் கடைக்காரன் எதைக் கொடுக்கிறானோ அதை மட்டுமே குடிக்க வேண்டும். மதுபான விற்பனை என்பது மிகப் பெரிய லாபி. இதைப் பற்றி மட்டும் யாரும் அலச மாட்டார்கள்.

சொன்னா புரிஞ்சுக்க ஜீவா.. மொமெண்ட்

ஏழுமலை வெங்கடேசன்

Related Posts