32°C
விளம்பரம்
Advertisement

அஸ்வின்ஸ் – விமர்சனம்!

admin சேலம் Published: June 22, 2023 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



ஒரு காமெடி படமெடுக்க வேண்டுமென்றால் சிரிக்க தெரிந்த இரண்டு அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் இருந்தால் போதும்.. ஒரு ஆக்‌ஷன் படமெடுக்க நல்ல ஸ்டண்ட மாஸ்டர் அமைந்தால் போதும்.. ஒரு குடும்பக் கதை தயார் செய்ய வேண்டுமென்றால் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் படங்கள் சிலவற்றைப் பார்த்தால் போதும்.. ஒரு காதல் படமெடுக்க அழகான ஜோடி இருந்தால் போதும்.. ஆனால் புதுமையான ஒரு திகில் படமெடுக்க வேண்டுமென்றால் மிகச் சிறந்த டீம் அமைய வேண்டும்.. அப்படியான ஒரு பக்கா டீம் கை வண்ணத்தில் தயாராகி வந்திருக்கும் தமிழ் படமே ‘அஸ்வின்ஸ்’..!

 

கதை என்னவென்றால் லண்டனில் ஒரு பெரிய மாளிகையில் ஆராய்ச்சிக்குப் போன ஆர்க்கியாலாஜி டிப்பார்ட்மெண்ட் லேடி ஆபீசர், தன் உதவியாளர்கள் 15 பேர்களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் அப்படி சூசைட் செய்து கொண்ட ஆபிசர் உடல் மட்டும் மிஸ்ஸிங்.. அத்துடன் இரவானால் அந்தப் பங்களா செல்லும் வழியைச் சுற்றி கடல் சூழ்ந்து கொள்ளும். இப்படியான மர்ம பங்களாவையும், அங்கு நிகழும் மர்மங்களையும் ஒரு வீடியோ படமாக எடுத்து யூ ட்யூப்பில் பகிரும் நோக்கில் நாயகன் வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் திக்,, திக் சம்பவங்களின் கோர்வையே ‘அஸ்வின்ஸ்’.

மெயின் கேரக்டரின் வரும் வசந்த் ரவி, நடிப்பில் நன்றாகவே தேறி இருக்கிறார்.. பயம் கலந்த கண்களில் வழியாகக் கூட படம் பார்ப்பவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறார் என்பதுதான் விசேஷம். அதிலும் படத்தின் பெருபங்கை இவரே சமாளித்து சபாஷ் எல்லாம் வாங்குகிறார்.. சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருந்தாலும், பயப்படுவதை மட்டுமே படம் முழுவதும் செய்திருக்கிறார்கள். ஆர்கியாலஜி ஆபீசர் ரோலில் வரும் விமலா ராமன், மிரட்ட முயற்சித்திருக்கிறார். அவரது உயரம் மற்றும் உருவம் பேய் மேக்கப்பிற்கு பொருத்தமாக இருந்தாலும், அவருடைய நடிப்பு எஸ்.ஜே.சூர்யா பாணியில் ஓவர் டோசில் இருக்கிறது

மியூசிக் டைரக்டர் விஜய் சித்தார்த். சின்னச் சின்ன காட்சிகளுக்கும் தேவையான ஒலிகளை வழங்கி படத்தின் தரத்தை உயர்த்தி விட்டார். கூடவே சவுண்ட் டிசைனர்களான சச்சின் & ஹரி கை வண்ணத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் படம் ஹாலிவுட் படமோ என்று எண்ண வைத்து விட்டார்கள். சபாஷ்..

கேமராமேன் எட்வின் சகாய் அஸ்வின்ஸ் படத்தின் இன்னொரு ஹீரோதான். படம் முழுவதையும் இருட்டில் படமாக்கினாலும், சரியான வெளிச்சத்தை பயன்படுத்தி கடல் நடுவே சில மணி நேரங்கள் பாதை உருவாகும் அந்தப் பாதையை படம் படுத்தி இருப்பதல்லெம் ஏ கிளாஸ்.. இவர் பணிக்கு பக்கபலமாக இருந்த ஆர்ட் டைரக்டர் டான் பாலாவின் பணியும் சிறப்பு. எடிட்டர் வெங்கட் ராஜன் கை வணணத்தில் படத்தின் தரமே சில படி உயர்ந்து விட்டது..

மொத்தத்தில் எல்லாரும் புரியாத லெவலில் லாஜிக் இல்லாமல் மர்மமான விசயங்களை இப்போது நடக்கும் சம்வங்களை பழங்காலத்தோடு தொடர்பு படுத்தி திரைக்கதை அமைத்து இருந்தாலும் ஒரு தமிழ் படம் ஹாலிவுட் மூவி  பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்து விடுகிறது..!

மார்க் 3.75/5

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்