32°C
விளம்பரம்
Advertisement

அதிமுக எம் பி சசிகலா புஷ்பா எம் புருஷனை மேரேஜ் பண்ணிக்க போறார்- கலெக்டரிடம் புகார்!-

admin சேலம் Published: March 20, 2018 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா 2-வது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் ராமசாமி என்பவரின் மனைவி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதிமுகவை சேர்ந்த எம்.பி.சசிகலா புஷ்பா சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரை எதிர்த்து பேசாமல் இருந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு மத்தியில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தன்னை தாக்கியதாக நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்து அவரது கணவர் அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்கப்பட்டது, பிறகு அவர் மீது அவரது வீட்டு பணிப்பெண்கள் புகார் அளித்தது, திமுக எம்.பி திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானது என தொடர்ந்து சர்ச்சையிலும் பரபரப்பிலும் இருப்பவர் சசிகலா புஷ்பா.
தற்போது அவருக்கும் ராமசாமி என்பவருக்கும் வரும் 26-ம் தேதி டெல்லியில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக சசிகலா புஷ்பா பெயரும், ராமசாமி பெயரும் சேர்ந்து திருமண அழைப்பிதழ் ஒன்றும் சமூக வலைதளங்களில் உலா வந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சசிகலா புஷ்பாவை 2-வது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் ராமசாமி என்பவரின் முதல் மனைவி சத்யபிரியா மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராமசாமி மீது புகார் அளித்துள்ளார். ஆம்.  மகாளிபட்டியிலிருந்து கைக்குழந்தையாேடு வந்த சத்யப்பிரியா தமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக இருந்த ராமசாமிக்கும் 2014 ம் ஆண்டே திருமணம் நடைபெற்ற தாே டு தன்னை நீதீபதி என்று சாெ ல்லித்தான் ராமசாமி என்னை திருமணம் முடித்தார் எனக்கூறி அதற்கான பாே ட்டாே ஆதாரங்களை காண்பித்த தாே டு அவர் கூட சேர்ந்து வாழ வே ண்டும் என கண்ணீருடன் குறிப்பிட்டார் .
தற்போது வெளியாகும்  செய்திகளில் ராமசாமி சசிகலா புஷ்பாவை திருமணம் செய்யப்பாே வதாக வந்த தகவல்கள் உண்மை தானா என தனக்கு உறுதி செய்யப்பட வே ண்டும் என காேரிக்கை வைத்துள்ளார் .மே லுமஒரு வருடம் தான் ராமசாமியாே டு சேர்ந்து வாழ்ந்ததாகவும் ,அதன் பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் என்னை தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்த அவர் பாே ன் மூலம் தன்னிடம் பேசி வந்தார் .இந்நிலையில் அவரைப்பற்றி புதிய திருமணதகவல் செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்திருப்பதாக கூறினார் .
இதையடுத்து, தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்