32°C
விளம்பரம்
Advertisement

நடராஜன் கவலைக்கிடம்: பரோலில் வருகிறார் சசிகலா!

admin சேலம் Published: March 18, 2018 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம. நடராஜன் நுரையீரல் தொற்று காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டு குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மருத்துவமனையில் உள்ள நடராஜனைக் காண சசிகலா பரோலில் நாளை சென்னை வருவதற்கு வாய்ப்பு என கர்நாடக மாநில அதிமுக அமைப்பாளராக உள்ள புகழேந்தி இந்த தகவலைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெங்களூர் பரப்பண அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை பரோலில் விடுதலை செய்யக் கோரி முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடனே அவர் புறப்பட்டு சென்னைக்கு வருவார் என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.

74 வயதான நடராஜனின் உடல் நிலை கவலை அளிப்பதாகக் கூறப்படுகிறது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்று வந்தார். 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை சற்று தேறியதும் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி வீடு திரும்பி மகாலிங்கபுரத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். கடந்த 5 மாதங்களாக மருத்துவமனைக்கு நேரடியாக சென்று தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மீண்டும் அவர் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவசர சிகிச்சை பிரிவில் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை கவலையளிப்பதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனை மதிமுக தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழர் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் குளோபல் மருத்துவமனைக்கு சென்று, நடராஜனின் உடல்நலம் குறித்து விசாரித்தன

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்