ரிலையன்ஸ் ஜியோ செல்போன் – விலை ரூ. 999 மட்டுமே!
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்திய தொலைத்தொடர்புத் துறையில் 4ஜி சேவையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம், இலவச 4ஜி வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங், டேட்டா சேவையை சில பல மாதங்களுக்கு இலவசமாக அறிமுகம் செய்து, வாடிக்கையாளர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பலரும் ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு மாறிவருகின்றனர்.

இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்த அதிரடியாக 4ஜி இலவச அழைப்பு வசதி கொண்ட சிம்முடன் ரூ.999க்கு புதிய செல்போனை அறிமுகப்படுத்த உள்ளது. தொலைத்தொடர்பு சேவையில் ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ஜியோ சிம் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போன் அழைப்பு மற்றும் 4 ஜி நெட்வொர்க் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுவரையும் சுமார் 6 கோடி பேர் ஜியோ இணைப்பை பெற்றுள்ளனர். தினமும் 6 லட்சம்பேர் ஜிேயா இணைப்பை பெற்று வருகிறார்கள். முதலில் டிசம்பர் வரை இலவச சேவை வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனத்தினர் அறிவித்து இருந்தார்கள்.
தற்போது மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய செல்போனை அறிமுகப்படுத்த உள்ளார்கள். 2017 முதல் காலாண்டுக்குள் இந்த போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதிவேக இயங்குதளம் வசதியாக எல்டிஇ(LTE) அல்லது விஓஎல்டிஇ(VoLTE) தொழில்நுட்பத்தில் இந்த செல்போன் செயல்படும். அதோடு இலவச சிம் கார்டு வழங்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். மேலும் முன்பக்கம் மற்றும் பின்பக்க காமிராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதோடு ஜியோ சாட், டிவி, வீடியோக்கள் மற்றும் ஜியோ பணப்பரிவர்த்தனை செய்யும் புதிய இயங்குதளங்கள்(ஆப்ஸ்) பிர த்யேகமாக இந்த மொபைலில் உள்ளன.
விலை அனைவரும் எளிதாக வாங்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.999 மற்றும் ரூ.1500க்கு விற்பனைக்கு வர உள்ளது.
* முன் மற்றும் பின்பக்க காமிராக்கள்
* ஜியோ சாட், லைவ் டிவி, தேவைப்படும் அளவு வீடியோ வசதிகள்
* அதிக அளவு ஆப்ஸ்கள்
* ஜியோ பணப்பரிவர்த்தனை
* விலை 999 மற்றும் 1500


