ஆயுளை அதிகரிக்கும் ஃபேஸ்புக்கில் அடிசினலா கமர்ஷியல் வீடியோ வரப் போகுது!
பெரும்பானவர்களிடம் ஃபேஸ்புக் போன்ற சமூக வவைத்தளங்களில் உலாவுவது தீமையை அதிகரிக்கும் என்ற கருத்தே நிலவி வருகின்றது. அதனால், ஃபேஸ்புக் பற்றிய தவறான எண்ணம் பொது மக்களிடம் இருக்கின்றது.இந்நிலையில், இந்த கருத்தை பொய்யாக்கி இருக்கின்றது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று. அதாவது, ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களை விட, அதைப் பயன்படுத்தாதவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என்று கூறுகிறது அந்த ஆய்வு.மேலும், சமூக தொடர்புகளை அதிகளவில் கொண்டிருப்பவர்களின் ஆயுள் அதிகம் என்ற முந்தைய ஆய்வையே, இந்த ஆய்வும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப் ஆனது வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது.இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை டவுன்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
இதேபோன்றதொரு வசதியினை ஃபேஸ்புக் நிறுவனம் தரவுள்ளது. இதன்படி ஃபேஸ்புக்கில் டவுன்லோடு செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்கள் வர உள்ளது. எனினும் இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வீடியோக்கள் குறைந்தது 90 நொடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறான வீடியோக்களில் 20 நொடிகள் பின்னர் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும்.மேலும் குறித்த விளம்பரங்கள் அனைத்தும் பாரம்பரிய தொலைக்காட்சிகளில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களப் போன்றே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ் விளம்பரங்களின் ஊடாக வீடியோக்களை டவுன்லோடு செய்பவர்களுக்கு 55 சதவீத லாபத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


