புதுச்சேரி, தமிழக அரசுகள் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாமே!

புதுச்சேரி, தமிழக அரசுகள் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாமே!

கோவா , இன்று பெரியளவில் வருவாயை ஈட்டுகிறதென்றால் அது அந்த நிலப்பரப்புக்கே உரிய சுற்றுலா வாய்ப்புக்காகத்தான். அதிலும் சில ஆண்டுகளாக கேசினோ எனப்படும் சூதாட்ட விளையாட்டு கப்பல்கள் பெருமளவில் மக்களை ஈர்க்கிறது,

குறிப்பாக புரியும்படி சொல்லவேண்டுமானால் விழுப்புரத்திலிருந்து மட்டும் ஒரு மார்வாடிகள் கும்பல் ஆண்டுதோறும் சென்று சராசரியாக 25 லட்சத்துக்கும் மேல் சூதாடி பணத்தை ஜாலியாக இழந்துவிட்டு வருவார்கள். இதை கேட்ட போதெல்லாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நேரில் பார்த்துபோது கோடிகளை இழந்து கொண்டிருந்தவர்கள் சிலரையும் நேரில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இதை , எப்படி துணிந்து தொடர்ந்து பணத்தை இழக்கிறார்கள் என்று பேசிப்பார்த்தால் அவர்கள் பார்வையில் வேறு விதமாக புரிந்துகொள்ள முடிந்தது. அதாவது, சம்பாதிப்பது செலவழிப்பதற்காகத்தான் என்கிற சித்தாந்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெரும் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை இப்படி கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கும் விசயமாக எடுத்துக்கொண்டு தெரிந்தே இழக்க துணிகிறார்கள்.

இதனை அரசாங்கம் அங்கீகரித்து நெறிமுறைப்படுத்தி வருவாய் ஈட்டும் ஒரு வழியாக ஆக்கிக்கொள்ளலாம். நம்மவர்கள் பெரும்பாலும் மக்காவ் எனப்படும் சீன நாடுகளுகெல்லாம் இதுபோன்ற கேசினோ கேளிக்கைக்கு சென்று கொண்டு இருந்தார்கள் , அது சமீபத்தில் இலங்கை , கோவா, சிக்கிம் (லேண்ட் கேசினோ வகையறாக்கள்) என மாறியுள்ளது. இதுபோன்ற கேசினோக்களுக்கு மென்பொருள் வழங்குவதில் நம்மூர் ஹெச்.சி.எல் நிறுவனம் பல ஆண்டுகளாக கோலோச்சுக்கொண்டிருக்கிறது. பலருக்கும் வேலை வாய்ப்புக்களை பெருக்கவும் வாய்ப்பு உண்டு , குறிப்பாக அரசு வருவாயில் பெரும் பங்கு ஈட்டவும் வாய்ப்புள்ளது.

மேற்சொன்ன பல சாதக , பாதகங்களை கருத்தில் கொண்டு புதிதாக அமையவுள்ள புதுச்சேரி, தமிழக அரசுகள் வருங்காலத்தில் கேசினோ கேளிக்கை விடுதிகள் அமைக்க ஆவண செய்தால் அவர்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

வி.அன்பழகன்

Related Posts

error: Content is protected !!