இனிமே வாழ்க்கை முழுக்க முகமுடி இருக்கக் கூடும்!- முதல்வர்கள் கூட்டத்தில் மோடி!

இனிமே வாழ்க்கை முழுக்க முகமுடி இருக்கக் கூடும்!- முதல்வர்கள் கூட்டத்தில் மோடி!

இந்தியாவெங்கும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாக் டவுனை மத்திய அரசு கொண்டு வந்தது. கரோனா பாதிப்பு குறையாததையடுத்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை 2-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த லாக் டவுன் காலத்திலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை எட்டியுள்ளது. 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு கொண்டுவருவதற்கு முன்பும், முதல் கட்ட லாக் டவுன் முடியும் முன்பும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் தேதிகளிலும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கரோனா பாதிப்பு குறைவாகவும், பாதிப்பே இல்லாத மாவட்டங்களில் கடந்த 20-ம் தேதி முதல் கட்டுப்பாடு களைத் தளர்த்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் மே 3-ம் தேதிக்குப் பின் மீண்டும் லாக் டவுனை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேரள முதல்வர் பிரணாய் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காகஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (ஏப்ரல் 27) வீடியோ கான்பிரன்ஸ் முறையில் பிரதமர் மோடி மாநில முதல்வர்களிடம் ஆலோசனை நடத்தினார். மார்ச் 20, ஏப்ரல் 2, ஏப்ரல் 11 ஆகிய தேதிகளையடுத்து இன்று நான்காவது முறையாக முதல்வர்களுடன் ஆலோசித்துள்ளார் பிரதமர். இன்றையக் கூட்டத்தில் நேரமின்மைக் காரணமாக ஏழு முதல்வர்கள் பேசிய நிலையில் தமிழக முதல்வர் உள்ளிட்ட மற்ற முதலைமச்சர்கள் தங்கள் கருத்துகளை எழுத்து ரீதியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் வரும் மே 3ம் தேதியன்று பொது ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் அதனை மே 16ம் தேதி வரை நீடிக்க வேண்டும் என்று டெல்லி மற்றும் 5 மாநிலங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. மத்திய அரசிடம் இக்கோரிக்கையை வைத்துள்ள டெல்லி. மகாராஷ்டிரம் .மத்திய பிரதேசம் .மேற்கு வங்காளம். பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகியவை தங்கள் மாநிலங்களில் உள்ள சிவப்பு பகுதிகளில் மட்டுமாவது ஊரடங்கு 16ஆம் தேதி வரை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளன. குஜராத். ஆந்திரப் பிரதேசம். தமிழ்நாடு. ஹரியானா. இமாச்சலப் பிரதேசம் .கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறி எதுவோ அதை தங்கள் மாநிலம் பின்பற்ற விரும்புவதாக அறிவித்துள்ளன.

இதை அடுத்து பிரதமர் பேசிய விபரம் இதுதான் :

கடந்த ஒன்றரை மாதங்களில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடிந்ததால், பொது முடக்கம் நமக்கு சாதகமான முடிவுகளை அளித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை பல நாடுகளின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையுடன் ஒப்பிடத்தக்கது. இந்தியா உட்பட பல நாடுகளின் நிலைமை மார்ச் மாத தொடக்கத்தில் கிட்டத்தட்ட ஒத்ததாக இருந்தது. இருப்பினும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவால் பல மக்களைப் பாதுகாக்க முடிந்தது. எவ்வாறாயினும், வைரஸின் ஆபத்து வெகு தொலைவில் உள்ளது என்றும் நிலையான விழிப்புணர்வு மிக முக்கியமானது

நாடு இதுவரை இரண்டு பொது முடக்கங்களைக் (Lockdown) கண்டுள்ளது, இரண்டுமே சில அம்சங்களில் வேறுபட்டவை. இப்போது நாம் நிலைமையைச் சரி செய்யும் வழி பற்றி சிந்திக்க வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி, கொரோனா வைரஸின் தாக்கம் இனிவரும் மாதங்களிலும் தொடரும். முகமூடிகள் மற்றும் முக அட்டைகள் அடுத்த நாட்களில் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறலாம். இந்தச் சூழலில், நம் அனைவரின் நோக்கமும் விரைந்து நிலைமையைச் சரி செய்வதுதான் . மேலும் நாட்டில் பலருக்கு இருமல், சளி அல்லது அறிகுறிகள் உள்ளதா என்பதை சுயமாக அவர்களே அறிவித்து வருவதாகவும், இது வரவேற்கத்தக்க அறிகுறியாகும்

இதனிடையே COVID -19 க்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தபடியே நாம் பொருளாதாரத் திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முடிந்தவரை தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதன் முக்கியத்துவத்தையும், சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு நேரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

கொரோனாவு க்கு எதிரான போரில் நாட்டின் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக ஆரோக்ய சேது பயன்பாட்டை அதிகமான மக்கள் பதிவிறக்குவதை உறுதி செய்ய வேண்டும்ர்.”நாம் தைரியமாக இருக்க வேண்டும் அத்துடன் பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும்

குறிப்பாக ஹாட்ஸ்பாட்களில், அதாவது நிறக்குறீயீட்டின் படி சிவப்பு மண்டல – அபாய மண்டல – பகுதிகளில் மாநிலங்கள் அரசின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அமல் படுத்துவதன் முக்கியத்துவத்தை அரசையும் மீறி மக்கள் புரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும். அதே சமயம் மாநிலங்களின் முயற்சிகள் சிவப்பு மண்டலங்களை ஆரஞ்சு நிறமாகவும் பின்னர் பசுமை மண்டலங்களாகவும் மாற்றுவதை நோக்கி இருக்க வேண்டும்.

இப்போதைக்கு வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களைத் திரும்பப் அழைத்து வரும்போது. அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே செய்ய வேண்டும். அதே சமயம், வானிலை மாற்றங்கள் – கோடை மற்றும் பருவமழை வருகை – மற்றும் இந்த பருவத்தில் வரக்கூடிய நோய்கள் ஆகியவற்றையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

Related Posts

error: Content is protected !!