பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்- வீடியோ!

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்- வீடியோ!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப் பட்டது. நாடு முழுவதும் சுமார் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1.15 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையொட்டி டெல்லியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று பிரதமர் மோடியும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவருக்கு கோவேக்சின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. மோடிக்கு, புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதாவும், கேரளாவைச் சேர்ந்த மற்றொரு செவிலியரும் தடுப்பூசி செலுத்தினர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய துண்டை தோளில் அணிவித்திருந்தார். அந்த துண்டு அஸ்ஸாம் பெண்கள் அவருக்கு பரிசாக வழங்கியது.

இதனிடையே பிரதமருக்கு தடுப்பூசி செலுத்துகிறோம் என்பதால் செவிலியர்கள் பதற்றத்துடன் இருப்பார்கள் என்பதை உணர்ந்த பிரதமர் மோடி அவர்களுடன் நகைச்சுவையாக பேசி அவர்களின் பதற்றத்தை போக்க உதவியுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

“அரசியல்வாதிகளுக்கெல்லாம் தடினமான தோல் இருக்கும், அதனால் கால்நடைகளுக்காக பயன்படுத்தும் ஊசியைப் பயன்படுத்தப் போகிறீர்களா?” என கேட்டுள்ளார். அர்த்தம் புரியாமலே இல்லை என செவிலியர்கள் தெரிவித்தனர். பின்னர் மீண்டும் அவர் விளக்கி கூறிய பின்னர் தான் பிரதமர் நம்மிடம் நகைச்சுவையாக பேசியிருக்கிறார் என்பதை உணர்ந்து செவிலியர்கள் இருவரும் சிரித்துள்ளனர்.

புதுவையை சேர்ந்த செவிலியர் நிவேதா கூறுகையில், அதற்குள்ளேயும் ஊசி போட்டுவிட்டீர்களா? என்னால் உணரக் கூடிய முடியவில்லை என பிரதமர் தன்னிடம் பேசியதாக கூறியுள்ளார். மேலும் தங்களிடம் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதையும் பிரதமர் கேட்டதாக கூறினர்.

அடுத்த 28 நாட்களில் 2வது முறையாக கொரோனா தடுப்பூசியினை பிரதமர் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!