சைக்கோ – ஒரு வரி விமர்சனம்!

சினிமா ரசிகர்கள்,பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் கவரும் பொருட்டு தங்கள் படத்தின் டைட்டில் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்ட தயாரிப்பாளர்கள்,டைரக்டர்கள் கோலிவுட்டில் ஏராளமானோர் உண்டு. அட்டகாசமான டைட்டில் யோசிக்கவே மாதக் கணக்கில் ரூம் போட்டு யோசித்த டீம்-கள் உண்டு. அதிலும் அந்த கால திரைப்படங்கள் தேச நலன் , அம்மா பாசம் , காதல் என்பது போன்ற தலைப்புகளை சூட்டி குடும்பத்தோடு காணும் வகையில் சினிமா எடுத்தார்கள்.. அதிலும் தங்கள் படங்களுக்கான தலைப்புகளைச் சூட்டுவதில் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தனி அக்கறைக் காட்டினார்கள். ஆனால் இப்போதெல்லாம் தலைப்பே சர்ச்சையை ஏற்படுத்தினால்தான் கொஞ்சமாவது வியாபாரம் ஆக வாய்ப்பு என்ற ரீதியான சிந்தனை அதிகமாகி விட்டது.
அந்த வகையில் ஆரோக்கியமான மன நிலையில் வாழும் குடுபத்தினர் தங்கள் வீடுகளில் பயன் படுத்த யோசிக்கும் வார்த்தையான ‘சைக்கோ’ என்ற தலைப்பிலொரு படம் வந்திருக்கிறது. பொது வாக சென்சார் போர்டு எப்போதும் படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் போன்றவற்றை நீக்கச் சொல்லிதான் நாம் பார்த்திருப்போம். ஆனால் மிஸ்கின் இயக்கியுள்ள இந்த படத்திற்கு வைத்த சைக்கோ பெயரையே மாற்ற வற்புறுத்தினார்கள். மனநோய் பற்றிய பெயர்களை வைப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் தான் இந்த பிரச்சனைக்கு காரணம். ஆனால் பெயர் மாற்றத்திற்கு ஒப்புக்கொள்ளாத மிஸ்கின், படத்தை revising கமிட்டிக்கு அனுப்பி பெரிய போராட்டத்திற்கு பிறகு அவர்களிடமிருந்து சைக்கோ என்ற தலைப்பை வைக்க ஒப்புதல் வாங்கி கோலிவுட்டுக்கு ஒரு ரத்த வாந்தியை அளித்திருக்கிறார்.
இந்த படத்திற்கு ஒற்றை வரியில் விமர்சனம் சொல்வதனால்…