அரை வெற்றியான ‘ஒரு நாள் கூத்து’

அரை வெற்றியான ‘ஒரு நாள் கூத்து’

கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டாம் முறையாக அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கும் திரைப்படம் ஒரு நாள் கூத்து.

oru naal jun 11

கல்யாணம் சமூகத்தை ஆட்டிவைக்கும் “ஒரு நாள் கூத்து” வயது வந்தவர் எல்லோரும் சந்திக்கும் முதல் கேள்வி கல்யாணம். இதை மையமாக கொண்ட படமே “ஒரு நாள் கூத்து”

IT யில் வேலை பார்க்கும் தினேஷ் நிவி இருவரும் காதலிக்க. அவர்களின் குடும்ப தகுதிகள் அவர்கள் கல்யாணத்தை தடுக்கிறது. மற்றொருபுறம் FMல் வேலை செய்யும் ரித்விகா கல்யாண வரன் தேடித்தேடி இறுதியில் நிச்சயமான மாப்பிள்ளையும் கல்யாணத்தை நிறுத்த உடன் வேலை செய்யும் ரமேஷ்திலக் உடன் காதலாகிறார்.

இதனிடையில் படிப்பை முடித்து கல்யாணம் நோக்கி காத்திருக்கும் மியா ஜார்ஜ் வாழ்வு மாப்பிள்ளை பார்க்கும் படலமாக மட்டுமே கடந்து போய்க்கொண்டிருக்கிறது. வருடக்கணக்கில் கல்யாணத்திற்கு காத்திருந்து நொந்து நூடுல்ஸ் ஆகிறார் மியாஜார்ஜ்.

இவர்களின் காதல் வாழ்கையும் கல்யாண பிரச்சனைகளுமே “ஒரு நாள் கூத்து” படம்

கல்யாணம் ஏன் இவ்வளவு சிக்கல் மிகுந்ததாய் இருக்கிறது என்பதை சுவாரஸ்யம் குன்றாமல் சொல்கிறது படம்.

உருவாக்கத்தில் முதல் பட இயக்குனரா என ஆச்சர்யப் பட வைக்கிறார். நடிகர் தேர்வே அட்டகாசம். நடித்த அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களில் பொருந்திப்போயிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். பாடல்களும் பின்னணி இசையும் இப்படத்திற்கு பெரும்பலம்.

இடைவேளை வரை சுவாரஸ்யமாக செல்லும் படம் பின்பு பெரும் இழுவையாக இருக்கிறது. தன் போக்கில் சுற்றி அலைகிறது திரைக்கதை.
தினேஷ் நண்பர்களாக வரும் பாலா மற்றவர்களின் காமெடி படத்தில் பெரிய ரிலீஃப்.

இக்கால இளைஞர்கள் வாழ்வு இப்படியா இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படத்தின் முடிவு தரும் அதிர்ச்சியை ரசிகன் ஏற்றுக்கொள்வானா என்பதில் இருக்கிறது இப்படத்தின் வெற்றி!

“ஒரு நாள் கூத்து” அரை வெற்றி!

Related Posts