நம் நாட்டில் வாழச் சிறந்த நகரப் பட்டியலில் சென்னை, நெல்லை!

இந்தியாவில் வாழச் சிறந்த நகரம் குறித்து ஆண்டு தோறும் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்படுகிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், மக்கள் வாழ எளிதான நகரங்கள் கொண்ட பட்டியலை மத்திய ஊரக விவகாரத்துறை அமைச்சகம் பட்டியல் வெளியிட்டுள்ளது. குடியிருப்புகள், சுத்தமான குடிநீர், அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள் பாதுகாப்பு உள்ளிட்டவையை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வெடுக்கப்பட்டது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் நடத்தியது நிலையில் நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை, நெல்லை உட்பட 10க்கு மேற்பட்ட மாநகராட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றன
இந்தியாவில் வாழச் சிறந்த நகரம் குறித்து ஆண்டு தோறும் அனைத்து மாநிலங்களிலும் .நடக்கும் ஆய்வில், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மக்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந் நிலையில் மக்களின் வாழ்க்கை திறன், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நகரங்களுக்கான பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எச்.எஸ்.பூரி டெல்லியில் அதற்கான பட்டியலை வெளியிட்டு உள்ளார். அதில், சுமார் 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேலாக உள்ள நகரங்கள் பட்டியலில் தமிழகத்தின் சென்னை மற்றும் கோவை ஆகியவை இடம்பெற்றுள்ளது. இதில் சென்னைக்கு 4-வது இடமும், கோவைக்கு 7-வது இடமும் கிடைத்துள்ளது. குறிப்பாக கர்நாடகாவின் பெங்களூரு நகரம் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்த பட்டியலில் இடம்பெற்ற நகரங்கள் விவரம் 1- பெங்களூரு2- புனே3- ஆமதாபாத்4 – சென்னை5 – சூரத்6- நவி மும்பை7- கோவை8 – வதோதரா9- இந்தூர்10- கிரேட்டர் மும்பை
இந்த பட்டியலில் கடைசி 10 இடங்களில் இடம்பெற்ற நகர்ம 40 – பரிதாபாத்41- விஜயவாடா42- ராஞ்சி43- ஜபால்பூர்44-கோடா45- அமிர்தசரஸ்46- கவுகாத்தி47- பெய்ரேலி48- தன்பாத்49- ஸ்ரீநகர்
இந்த பட்டியலில் தலைநகர் டில்லி 13வது இடத்தில் உள்ளது காசியாபாத் மற்றும் பரிதாபாத் முறையே 30 மற்றும் 40வது இடத்தில் உள்ளது. மீரட் 36வது இடத்தில் உள்ளது
இதேபோல், 10 லட்சத்திற்கு கீழ் குறைவாக வசிக்கும் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மக்கள் எளிதாக வாழ தகுதி வாய்ந்த நகரங்கள் பட்டியல்1- ஷிம்லா2- புவனேஸ்வர்3- சில்வாசா4- காக்கிநாடா5 – சேலம்6- வேலூர்7- காந்திநகர்8- குருகிராம்9- தேவங்ரே10 – திருச்சி
10 லட்சத்திற்கும் அதிகம் மக்கள் தொகை கொண்ட உள்ளாட்சி அமைப்புகளில், மக்கள் வாழ சிறந்த மாநகராட்சிகள் பட்டியல் 1- புதுடில்லி2- திருப்பதி3- காந்திநகர்4-கர்னல்5 – சேலம்6- திருப்பூர்7- பிலாஸ்பூர்8-உதய்ப்பூர்9- ஜான்சி10- திருநெல்வேலி