கண்ணப்பா – விமர்சனம்!

கண்ணப்பா – விமர்சனம்!

முன்னொரு கருப்பு வெள்ளை சினிமாக் காலம் – அதாவது 1965 — 1980 வரை கடவுள்கள் பற்றி பக்தி திரைப்படங்கள் அடிக்கடி வெளிவந்து மக்களை பெரிதும் ஈர்த்தன.மக்களும் திரும்பத் திரும்ப இவைகளை விரும்பிப் பார்த்தனர். இவைகளில்  திருவிளையாடல், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், திருவருள், திருவருட் செல்வர், திருமலை தென்குமரி, திருமால் பெருமை, ஏழுமலையான் மகிமை, தெய்வம், துணைவன், ஆதிபராசக்தி……. மற்றும் பல முக்கியமானவை! இவைகளை இன்று சின்னத்திரையில் காண்போர் பட்டியல் பெரிதுதான். ஆனால் கடவுளர்கள் தொடர்பான பக்தி திரைப்படம் எவரேனும் இனி எடுத்தால் இதனை விரும்பி பார்க்க நமது நாட்டில் ஆளில்லை! காலத்தின் கோலமிது! மேலும் அத்தகைய படங்கள் எடுக்கும் பெரும்பொருட்செலவு ஆகிறது என்பதால் பக்தி திரைப்படங்கள் எடுக்க யாரும் முன் வருவதில்லை என்பதும் தனித் தகவல். இச்சூழலில் வேடராகப் பிறந்த திண்ணன் சிவலிங்கத்தைக் கண்டு பூஜை செய்ததும், தான் உண்கிற மாமிசத்தைப் படைத்து வணங்கியதும், அதனைப் பார்த்த ஒரு வேதியர் ‘இது முறையல்ல’ என்று கொதித்தெழுந்ததும், பிறகு சிவலிங்கத்தில் இருந்த கண்களில் இருந்து ரத்தம் வடிந்ததைப் பொறுக்க முடியாமல் தனது கண்களைத் திண்ணன் பொறுத்தியதும், அதனால் அவர் ‘கண்ணப்பர்’ என்ற பெயரைப் பெற்ற பெரிய புராணக் கதையில் சாராம்சத்தை எடுத்து அதிபிரமாண்டமாக ‘கண்ணப்பா’ என்றொரு படத்தை வழங்கி கவர முயன்றிருக்கிறார்கள்.

அதாவது காளகஸ்த்தியில் உள்ள காடுகளில் வாழ்ந்து வருகிறார் வேடுவன் திண்ணா. சிறுவயதாக இருக்கும் போது நரபாலியால் தன் நண்பனை இழந்த கோபத்தில், நாத்திகனாகி இறுக்கமான மனநிலையி வாழ்ந்து வருகிறார் திண்ணா. இவரை மாற்ற விரும்பும் சிவபெருமான் இவரை மனைவியிடம் இருந்து பிரித்து, பலவேறு சோதனைகள் தருகிறார். மானிட வேடம் இட்டு வரும் பூதகணம் ருத்ரா பிரச்சனைகள் தீர வாயு லிங்கத்தை பார்த்து ‘சிவாயா’ என்று சொல்லி வேண்ட சொல்கிறார். திண்ணாவும் சிவ நாமத்தை சொல்கிறார். அதன் பிறகு பல நல்ல மாற்றங்கள் திண்ணாவின் வாழக்கையில் நடக்கிறது. தீவிர சிவ பக்கத்தனாக மாறி தான் வேட்டையாடும் மிருகங்களின் மாமிசத்தை வாயு லிங்கத்திற்கு படைக்கிறார். திண்ணணின் இந்த செயலை பார்த்து சிவனுக்கு அன்றாடம் பூஜை செய்யும் சாஸ்திரிகள் கோபம் கொண்டு தனது ஆட்கள் மூலமாக திண்ணனை சித்திரவதை செய்கிறார். இந்த சித்திரவதையை பார்க்க முடியாமல் லிங்கத்தின் கண்களில் இருந்து ரத்தம் வருகிறது. சிவனின் கண்களிலிருந்து இரத்தம் வருவதை நிறுத்த தன் கண்ணை குத்தி எடுத்து தர முயல்கிறார் திண்ணப்பா என்று பலரும் பால்யத்தில் கேட்டு. படித்து அறிந்த கதைதான் கண்ணப்பா.

ஹீரோ திண்ணாவாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு, கடவுள் மறுப்பாளராக புரட்சிகரமான வசனங்கள் பேசுவது, போர் வீரராக அவர் எய்தும் அம்பு போல் வேகமாக செயல்படுவது, காதல் வயப்பட்டு மயங்குவது, சிவபக்தராக மாறி பக்திபரவசத்தில் உருகுவது என கிடைத்த வாய்புகளை சரியாகப் பயன்படுத்தி பாஸ் மார்க வாங்கி விடிறார். கடவுளை வெறுக்கும் நாத்திகனான நடிப்புக்கும், கண்ணப்பராக ஆத்திகனாகி பக்தியில் உருகும் போது வெளிப்படுத்தும் நடிப்பிலும் சரியான வேறுபாடுகளை காட்டி பலே சொல்ல வைக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தனின் கண்கள் பேசுகிறது, உருவம் கவர்ந்திழுக்கிறது, நடிப்பு கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறது. மொத்தத்தில், புராணக்கதைகளில் வரும் கற்பனை பெண் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் அழகு.

கேமராமேனின் ஒர்க் பிரமிப்பைக் காட்டுகிது. ஆனாலும் சில இடங்களில் க்ரீன் மேட் தொழில் நுட்பம் பயன்படுத்தி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

அகங்காரம் பிடித்த பண்டிதராக மோகன் பாபுவும், அமைதியாக பிரபாஸ் நன்றாக நடித்துளார்கள். படத்தின் வரும் சிவன் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. படத்தின் டைட்டில் கார்டில் நன்றி என மோகன் பாபு, மோகன் லால், பிரபாஸ் பெயர்களை போடுகிறார்கள். இதனுடன் ‘நன்றி தமிழ் மொழி’ என்று போட்டிருக்க வேண்டும். காரணம் கண்ப்பநாயனார் கதை நம் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் சொந்தமானது என்பதை வசதியாக மறந்து புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராண, இதிகாசக் கதைகளைத் தொலைக்காட்சிகளில் தொடர்களாகப் பார்த்து வருபவர்கள், அவற்றுக்கென்று ஒரு ‘டெம்ப்ளேட்’ இருப்பதை உணர்வார்கள். பாத்திரங்கள் மெதுவாக வசனம் பேசுவது, அவற்றின் பின்னணியில் இசை ஒலிக்க இடம் அளிப்பது என்று அவற்றில் இருக்கிற சிலபல விஷயங்கள் மாற்றமில்லாமல் இதிலும் எதிரொலிப்பதால் ஏனோ பல நேரங்களில் நாடகம் கொடுக்கும் சலிப்பை தந்து விடுகிறான் இந்த கண்ணப்பா

ஆனாலும் கண்ணப்பா கதைக்காக ஒரு முறைப் பார்க்கலாம்

மார்க் 2.75

CLOSE
CLOSE
error: Content is protected !!