‘ஜாலியோ ஜிம்கானா’ – விமர்சனம்!

‘ஜாலியோ ஜிம்கானா’ – விமர்சனம்!

சில பல வருடங்களுக்கு முன் ஓரிரு ஹிட் கொடுத்த டைரக்டர் சக்தி சிதம்பரம், தொடர்ச்சியாக சில படங்கள் தோல்வியை சந்தித்து வரும் சூழலில் இப்போது பிரபுதேவாவை டெட்பாடியாக்கி அவரைச் சுற்றி ஃபோர் லேடீஸ்களை வைத்து காமெடி என்ற அவரே நினைத்து ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற டைட்டிலி ஒரு முழுப் படத்தை வழங்கி இருக்கிறார். இத்தனைக்கும் தொடக்கத்திலேயே ‘இப்படத்தில் லாஜிக்கெல்லாம் பாக்காதீங்க, காமெடியை மட்டும் பாருங்க’ என்று சொன்னாலும், நம்பத்தன்மை இல்லாத திரைக்கதையாலும், தொடரும் அந்தக் காலத்து வார்த்தை காமெடிகளாலும் வறுத்தெடுத்து , கடுப்பேற்றி அனுப்பதில் ஜெயித்து விட்டார்..!

பிரபுதேவா ஒரு வக்கீல். அவரிடம் தங்கள் மீது சில ரவுடிகள் நடத்தும் தாக்குதல், அவர்கள் செய்த பணமோசடி பற்றி சொல்லி தீர்வு காணும் நோக்கில் அபிராமி, மடோனா செல்கின்றனர். ஆனால் போய் பார்த்த ஓட்டல் அறையில் பிரபுதேவா டெட்பாடி ஆக கிடக்கிறார். உடலில் எந்தவித காயங்களும் இல்லாத நிலையில் பிணமாக இருக்கும் பிரபு தேவாவை கடைசியாக பார்த்தவர்கள் என்பதால் கொலைப்பழி தங்கள் மீது விழுந்துவிடும் என்பதால், அவரது உடலை யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதற்குள் பிரபு தேவாவின் வங்கி கணக்கில் ரூ.10 கோடி இருக்கும் தகவல் இப்பெண்களுக்கு தெரிய வருகிறது. தங்களது பிரச்சனைகளை சமாளிக்க இந்த பணம் உதவியாக இருக்கும் என்பதால் பிணமாக இருக்கும் பிரபு தேவாவை உயிருடன் இருப்பது போல் காண்பித்து அந்த 10 கோடி ரூபாயை கைப்பற்ற முயற்சி  செய்வதே இப்படக் கதை

டெட் பாடியாக பிரபுதேவா நடித்திருக்கிறார்.. டெட்பாடி எப்படிடா நடிக்கும் என்று கேட்டால்-அது அப்படித்தான். ஏற்கனவே கமலின் மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் டெட்பாடியயாக நடித்திருப்பார். அந்த இன்ஸ்பிரேஷன்தான் இந்தக் கதை.டெட்பாடியாக இருக்கும் பிரபுதேவாவை தாங்கிப் பிடித்துக் கொண்டு அபிராமி, மடோனா கோஷ்டி கொடைக்கானல் வரை காரிலும், பஸ்ஸிலும் பயணிப்பது பொறுத்துக் கொண்டும்.. முடிந்தால் சிரிக்க வைக்க முயன்று கொண்டும் நேரத்தைக் கடத்துகிறார்கள்.

லாஜிக் இல்லையென்றாலும் டெட்பாடி மீது சிறிது நேரத்திலேயே நாற்றம் வர தொடங்கிவிடும் ஆனால் இவர்கள் ஒரு டெட் பாடியை நாள் முழுக்க சுமந்து கொண்டு சுற்றுகிறார்கள். அதிலும் பேங்க்கிற்கு அழைத்து. தூக்கி சென்று பேசுவது போல் நடிக்க வைக்கிறார்கள், அதையும் நம்பி ஒரு வங்கியின் கேன மேனேஜர் 10 கோடி ரூபாய் பணத்தை தர சம்மதிக்கிறார்.. யாருமே அவரை டெட்பாடி என்று கண்டுபிடிக்க மாட்டார்களாம். என்னதான் லாஜிக் இல்லை என்றாலும் காதில் பூ சுற்றலாம் ஒரு ஆளுயர மாலையே சுற்றி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் சின்னத்திரையில் வெளியாகும் போது கூட பார்க்க தகுதி இல்லாத படமிது

மார்க் 1.5/5

error: Content is protected !!