இருமுகன் ; விக்ரம் சமீபத்திய தொடர் தோல்வி படங்களில் முதலிடத்தை பிடிக்க தகுதியான படம்.

இருமுகன் ; விக்ரம் சமீபத்திய தொடர் தோல்வி படங்களில் முதலிடத்தை பிடிக்க தகுதியான படம்.

ஒருவரி கதை- மனித சக்திக்கு மிருக பலத்தை தரும் ஆபத்தான மருந்தை கண்டுபிடிக்கும் வில்லன் அதை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த முயற்சிக்கிறான். ஹீரோ எப்படி அதை தடுத்து அழிக்கிறார் என்பதுதான் இருமுகன்.

irumugan sep 9

கதைக்கு எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் ஹீரோ விக்ரம். நடிக்கும் படங்கள் தோற்றாலும், அண்ணி,அம்மா ரோலுக்கு பொருத்தமாக வயது உயர்ந்தாலும் தனது அழகால் இன்னமும் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் ஹீரோயின் நயன்தாரா. நயன்தாரா போதாது என்று இன்னொரு ஹீரோயின் நித்தியாமேனன்.கதைக்கு என்ன கேட்டாலும் செலவு செய்யும் மெகா தயாரிப்பாளர் சிபுதமீன்.இதுபோன்ற மெகா கூட்டணியை வைத்து இருமுகன் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். பட விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு…

விக்ரம்:

நடிகர் விக்ரம் சமீபத்திய தொடர் தோல்வி படங்களில் இருமுகன் முதலிடத்தை பிடிக்க தகுதியான படம். கதையின் கேரக்டர்களில் மெனக்கெடும் விக்ரம் கதையில் கோட்டை விடுவதால் வெற்றி விடுபட்டு விட்டது. இனியும் இப்படிபட்ட படங்களில் விக்ரம் நடித்தால் பல பவர்ஸ்டார் சீனிவாசன்கள் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு விக்ரம் நடிப்பதையே பார்க்க முடியவில்லை. இதில் அரவாணி வேஷத்தில் இன்னொரு விக்ரம். பொருந்தா திரைக்கதையில் கேலிக்கூத்தான வேஷம்.

நயன்தாரா :

ஒரே உடல் மொழி… கொடுத்த ஊதியத்துக்கு நயன்தாராவிடம் இன்னும் வேலை வாங்கி இருக்கலாம்.

நித்யாமேனன்:

ஹீரோயின் என்று சொல்லி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக்கியிருக்கிறார்கள். “நான் பிராஸ்டிடியூட் மாதிரி சரியா இருக்கேனா” என்று வசனம் பேசுவதோடு முடிகிறது அவர் பங்கு.

ரித்விக்கா:

கபாலியில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்ததாலேயே மலேசியா என்றதும் ரித்விக்காவை அதே தொழிலாளியாக காட்டி சாகடிக்கிறார்கள்.

சரி இனி விமர்சனத்திற்குள் போகலாம்….

இருமுகன் பட அறிவிப்பின் போது விக்ரம் மாஸ்க் போட்டபடி மிக வித்தியாசமான முறையில் காட்சியளித்தார். அதனால் சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சயின்ஸ் கொலாப்ஸ் ஆகும் படமாக பயங்கர கோமாளித்தனமான படத்தை கொடுத்திருக்கிறார்கள். மலேசிய போலீசை இதற்கு மேல் கேவலமாக காட்ட முடியாது. அந்தளவுக்கு மிக மோசமான திரைக்கதை. தெளிவில்லாத காட்சியமைப்புகள்.திணிக்கப்பட்ட பாடல் காட்சிகள்.

விக்ரமை ஹீரோயிசம் காட்ட வைக்கிறேன் என்று இயக்குனர் பல இடங்களில் காமெடி பீஸ் ஆக்கி இருக்கிறார்.

விஷவாயு தாக்காமல் இருக்க அணியும் மாஸ்க் ஏன் விக்ரம் அணிந்து போஸ் கொடுத்தார் என்பதற்கு கடைசி வரை இயக்குனர் விடை சொல்லவே இல்லை.

சினிமா என்றாலே லாஜிக் இருக்காது என்பது சரிதான் அதற்காக கதையும் இல்லாமல் திரைக்கதையும் இல்லாமல் ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தும் இன்ஹேலரின் விளம்பர படம் போல இருந்தால்….

கதையில் மிக முக்கியமாக சீரியசாக இடம் பிடித்த இன்ஹேலர் கடைசி காட்சியில் காம நெடிக்காக பயன் படுத்தி சொதப்பி இருக்கிறார் இயக்குனர். இந்த கதை எழுதும் போது ரொம்ப ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்குனர் பார்த்திருப்பார் போல… பல காட்சிகளில் முயற்சித்து குப்புற விழுந்து மூக்கை உடைத்துக் கொண்டிருக்கிறார்.
உலக பொழுது போக்கு துறையில் இந்திய குறிப்பாக தமிழ் சினிமாவுக்கு தனி இடம் உண்டு. இதுபோன்ற படங்கள் தொடருமானால் தமிழ் சினிமா உலகம் கேவலப்படும்.

தேசிய விருதுகள் பெற்ற நடிகர் விக்ரம் இனியாவது கதையை முழுசாய் கேட்டு நடிப்பது நல்லது.

அதே போல கோடிகளை கொட்டும் தயாரிப்பாளர்கள் இனியாவது கதையை கேட்டு விட்டு பணம் செலவு செய்தால் போட்ட பணமும் கிடைக்கும் காசு கொடுத்து பார்க்கும் ரசிகனும் திருப்தி அடைவான்.

மொத்தத்தில் இருமுகன்  விரைவில் சின்னத்திரையில் வரும்போது பார்ப்பதைக் கூட அவாய்ட் செய்வது உத்தமம்!

கோடங்கி