இறைவி – திரை விமர்சனம்! + சில பின்னணி தகவல்கள்!
நான் விமர்சனம் எழுதியே பல மாதங்கள் ஆகிவிட்டாலும் இந்த படத்தை பற்றி எழுத தூண்டிய காரணம் மூன்று விஷயங்கள்…….!

1. பட விமர்சனம் – வக்கிரத்தை மொத்த குத்தகைக்கு எடுத்து 5 மணி நேர படமாய் எடுத்து கத்திரி போட்டு போட்டு கடைசியில் வெளியாகியிருக்கும் இந்த படத்தின் ஸ்டோரி டெல்லிங் அருமை ஆனா ஸ்டோரி இல்லை என்பது தான். ஃபர்ஸ்ட் காப்பி பார்த்த பிறகு இதை வெளியே விட்டால் தயாரிப்பாளரின் கோமனம் கூட மிஞ்சாது என அஞ்சி கடைசி சீன்ல ” பொறுத்து போவறதுக்கு நான் என்ன பொம்பளையா – ஆம்பளை டானு” ஒரு லிட்டை எஸ் ஜே சூர்யாவை வைத்து சொருகியிருப்பதும் (கடைசி ரயில்வே பென்ச் டயால்க் சீன் ஒரிஜினல் படம் முடிந்து 5 மாசம் கழிச்சி எடுத்து ஒட்டப்பட்டவை), வடிவுக்கரசி சீன் அனைத்து சொருகுள் மட்டுமே, போஸ்டரில் இது வுMEN படம் என பெண்களை கவர இவர்கள் போட்ட சொக்குப் பொடி மிளகாய் பொடியாய் மாற படம் அப்படி இப்படி பப்படினு சுய விளம்பரத்தை கசிய விட தியேட்டரில் அடச்சே சத்தம் தான். ……..
2. கார்த்திக் சுப்புராஜ்க்கு ரெட் போட்ட தயாரிப்பாளர் சங்கத்தின் காரணத்தை பெரும்பாலான மீடியாக்கள் மறைத்தன. சிலது ரெட் மட்டும்னு சொல்லிட்டு கப்சிப் ஆயின. உண்மை என்னவென்றால் – இந்த படத்தில் வரும் தயாரிப்பாளரை அபப்டியே ஃபைவ்ஸ்டார் கதிரேசன் போல கெட்டப் செய்து ஜிகிர்தன்டா படம் முடித்தும் 2 வருஷமாய் வெளியே விடாமல் செய்த டார்ச்சரை மையப்புள்ளியாய் வைத்து தான் இந்த படத்தை எடுத்திருக்கின்றனர். அதை விட ஒரு படி போய அந்த தயாரிப்பாளர் டேய் நான் ஒரு கேவலமான குடும்பத்தில் பிறந்தவன் என்கிட்ட நியாயம் கேக்குறாயா என கேட்கும் காட்சியில் அத்தனை தயாரிப்பாளர்களும் ரெட் கார்ட் கொடுத்தான் போச்சு என புலம்ப ரெட் போட்டு சும்மானாச்சுக்கும் 7.5 கோடி பட்ஜட் படத்தை 13 கோடி ஆக்கி தயாரிப்பாளரை பனால் பன்னிட்டாருன்னு சொன்னாலும் உண்மை அது அல்ல. இதே ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பொல்லாதவன்னு ஒரு படத்தை ஆரம்பிச்சி இப்படித்தான் வெற்றிமாறன் வாழ்க்கையோடு 4 வருஷம் விளையாடி கொன்னு களைஞ்ச கதை ஏனோ இயக்குனர்கள்சங்கத்துக்கு தெரியாம கம்முனு ஆயிட்டாங்க்….
3. என்னது மூணு ஹிட்டு ஜிட்டு பிட்டு சட்டுனு கொடுத்த சுப்புராஜுக்கு ரெட்டானு இயக்குனர் சங்கம் கேப்பாங்கன்னு எதிர்பார்த்த அத்தனை பேருக்கும் ஏன் சுப்புராஜுக்கும் ஏமாற்றமே. ஏன்னா சுப்புராஜ் யூடியூப் குறும்படம் அதை காட்டி மூணு படம் அடிச்சிபுட்டாரு ஒரு இயக்குனரிடம் கூட பேருக்கு கூட உதவியாளர் அல்லது உதவி இயக்குனராய் இல்லை மற்றூம் இவர் பட்ஜெட்டை தாண்டிட்டாருனு உள்ளுரே விஷயத்தை பரப்பி இயக்குனர் சங்கம் கப் சிப்பாக உண்மையா இந்த பட்ஜெட் எகிறலுக்கு ரெட் போடனும்னா சங்கர் / செல்வராகவன் போன்ற 12 மணி நேர படத்தை எடுத்து அதுல 2 மணி நேர வெட்டிங் செய்யும் இயக்குனர்களுக்குத்தான் போடனும்.
ஏன் பாரதிராஜா ஒரு ஸ்டெப் மேல போய் சுப்புராஜ் ஒரு சினிமா கம்பெனி தொடக்கத்த்க்கு கூப்பிட அங்கு போயே அவர் ஃபங்கஷனில் நானெல்லாம் உதவி இயக்குனராக எம்புட்டு கஸ்டபடேன் தெரியுமா இவர் ஒண்ணுமே இல்லாம படம் பண்றாருனு விஷயத்தை போட்டு உடைக்கும் வீடியோவும் இணைத்துள்ளேன்….
இது தான் இறைவி யின் முன் பின் பக்கவாட்டு உண்மைகள்.
ஒரு வரி விமர்சனம் – இறைவி நல்ல தண்ணி ஊத்தின சூடு பண்ணின பழைய கிரேவி!


