பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் லீக் : பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.!

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் லீக் : பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.!

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானை, 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சீட்டுக்கட்டடை போல அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த வண்ணம் இருந்தன. இறுதியாக பாகிஸ்தான்38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது., இதனையடுத்து இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்து.

மகளிர் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இந்தியா தோற்றதில்லை என வரலாற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!