கோடீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்தியா!

கோடீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்தியா!

நைட் பிராங்க் ஆய்வு நிறுவனம், சொத்து ஆய்வு அறிக்கை என்ற பெயரில் முக்கிய முதலீடு மற்றும் சொத்து வாங்குதல் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டனர். அதில் கடந்த 2021–ம் ஆண்டில் இந்தியாவில் புதியதாக பில்லியனர்கள் என்னும் ரூ. 100 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் 145 பேர் உருவாக்கியுள்ளனர் என்று ஒரு தகவலை வெளியிட்டனர்.

5 ஆண்டுகளில் சென்னை இந்தியாவின் நாலாவது வேகமாக வளர்ந்து வரும் முதலீடு நகரமாக உருமாறும். இந்தியா உலக அளவில் இந்த பில்லியனர்கள் எண்ணிக்கையில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சென்னையில் கடந்த ஆண்டில் சொத்து முதலீடு 15% அதிகரித்துள்ளது. இது இன்னும் 5 ஆண்டுகளில் 66% ஆக உயர உள்ளது. பெங்களூரை அடுத்து சென்னை, ஆமதாபாத் நகரங்கள் இன்னும் 5 ஆண்டுகளில் சொத்து முதலீட்டில் இரண்டாவது இடம் வகிக்க உள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நைட் பிராங்க் ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் சொந்தமாக தொழில் துவங்கி 40 வயதிற்குள் பில்லினியர்களாக மாறியவர்கள் அதிகமாக உள்ள ஆறாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

error: Content is protected !!