பேடிஎம் பேமண்ட் வங்கி (Paytm Payment Bank) புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை!

பேடிஎம் பேமண்ட் வங்கி (Paytm Payment Bank) புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை!

ணப் பரிவர்த்தனை விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் பேடிஎம் பேமண்ட் வங்கி (Paytm Payment Bank) புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை டிஜிட்டல் பணப்பரிவத்தனை செயலியில் முன்னணி வகிக்கு நிறுவனம் பேடிஎம். சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை தற்போது யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்யும் வசதி உள்ளது. இந்த நிலையில், பணப் பரிவர்த்தனை விதிகளை முறையாகப் பின்பற்றாத விவகாரத்தில் பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1949-ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டம் விதி 35-ஏ பிரிவின்கீழ் இந்தநடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பான ஐயப்பாடு காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக ஆர்பிஐ கூறியுள்ளது.

நிறுவனத்தின் ஐடி செயல்பாடுகளை தணிக்கை செய்ய தகவல் தொழில்நுட்ப (ஐடி) தணிக்கைக் குழுவை அமைக்குமாறு பேடிஎம் நிறுவனத்தை ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது. ஐடி தணிக்கை நிறுவனம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதிய வாடிக்கையாளர்களை அனுமதிப்பதற்கு சிறப்பு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆர்பிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் சிறிய நிதி வங்கி தொடங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கியை இரு தினங்களுக்கு முன் பேடிஎம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் நிறுவன செயல்பாடு குறித்த புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!