தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணி வாய்ப்பு!

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணி வாய்ப்பு!

ருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Surgeon பணிக்கென காலியாக உள்ள 2553 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN MRB பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Surgeon பணிக்கென மொத்தம் 2553 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

01.07.2024 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 37 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

SCs / SC(A)s / STs / MBC&DNCs / BCMs – 22 ஆண்டுகள் எனவும், PWBD – 10 ஆண்டுகள் எனவும், EXSM – 13 ஆண்டுகள் எனவும் வயது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

Assistant Surgeon பணிக்கு தகுதியான நபர்கள் Tamil Eligibility Test, Computer Based Test, Document Verification, Oral Test ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

SC / SCA / ST / DAP(PH) – ரூ.500/-

மற்ற நபர்கள் – ரூ.1000/-

விண்ணப்பிக்கும் முறை:

இந்த TN MRB சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.04.2024ம் தேதி முதல் 15.05.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள ஆந்தை வழிகாட்டி/வேலைவாய்ப்பு என்ற லிங்கில் பார்வையிடவும்.

error: Content is protected !!