June 2, 2023

ஐசிஐசிஐ வங்கி புதிய ஆன்லைன் வசதி!

நம் நாட்டில் புதிதாக வர்த்தகம் செய்யவும், வர்த்தகத்தை விரிவு செய்யவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உதவ ஐசிஐசிஐ வங்கி புதிய ஆன்லைன் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இன்பைனிட் இந்தியா என்ற ஆன்லைன் இணைய தள சேவையை ஐசிஐசிஐ வங்கி நேற்று (டிசம்பர் 22) அறிமுகம் செய்தது.

இது குறித்து ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் விஷாகா முல்யே கூறுகையில், இது, தொழில்நுட்பம் வசதியுடனான எங்கள் சேவைகளை வழங்கி இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு அமைக்கும் முயற்சியாகும் என்றார்.

மேலும், எங்கள் வங்கியின் இந்த தனிப்பட்ட உத்தி, இந்தியாவில் தொழில் தொடங்கவும், விரிவாக்கவும் விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களின் பயணத்தை எளிமைப்படுத்தும் என்று நம்புவதாக கூறினார்.

ஐசிஐசிஐ –யின் இந்த வசதி மூலம், புதிதாக தொழில் தொடங்குவது, லைசன்ஸ் வாங்குவது, பதிவு செய்வது, மனிதவள சேவைகள், புகார்கள், வரிவிதிப்பு உள்ளிட்டவற்றில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சேவை அளிக்கிறது.