டிஸ்டண்ட் திரைப்படத்தின் டீசருக்கு ஹெவி ரெஸ்பான்ஸ்!

டிஸ்டண்ட் திரைப்படத்தின் டீசருக்கு ஹெவி ரெஸ்பான்ஸ்!

ஜி.கே இயக்கத்தில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாக நடித்துள்ள டிஸ்டண்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘டிஸ்டண்ட்’ எனும் புதிய படத்தை தயாரித்துள்ளார். இதில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாகவும், சவுந்தர்யா நஞ்சுந்தன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

திரில்லருடன் கலந்த சைன்ஸ் பிக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜிகே என்பவர் இயக்கியுள்ளார். இவர் பல விருதுகளை பெற்ற அசரீரி எனும் குறும்படத்தை இயக்கியவர். மேலும் இவரது ‘காதலின் தீபம் ஒன்று’ குறும்படம் யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலானது.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஜய் சித்தார்த் இதற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுதன், பிக் பிரிண்ட் கார்த்திக், ராதாகிருஷ்ணன், முத்துபாண்டியன்

இயக்கம் : ஜி.கே
இசை : விஜய் சித்தார்த்தா
ஒளிப்பதிவு: பிரவீன் குமார்
பாடல்கள்: ஆதி
படத்தொகுப்பு: இளையராஜா
கலை: தேவா
ஸ்டண்ட்: சுதேஷ்
VFX: முத்துகுமரன்
மாடல் மேக்கர்: அருண்
பாடியவர்: சில்வி சரோன்
PRO: KSK செல்வா

தயாரிப்பு:  சுரேஷ் நல்லுசாமி | முருகன் நல்லுசாமி

Related Posts

error: Content is protected !!