அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்!

மெரிக்காவின் 39வது அதிபராக பதவி வகித்தவர் ஜிம்மி கார்ட்டர். இவர் 1977 முதல் 1981ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார். விவசாய பின்னணி கொண்ட இவர் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கு அவருக்கு கிடைத்த மக்கள் அபிமானத்தால் ஜார்ஜியா மாகாண கவர்னர் தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி வரை உயர்ந்தார். கடந்த அக்டோபர் 1–ம் தேதி அவரது 100வது பிறந்தநாள் குடும்பத்தினர், நண்பர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் அவர் வயது மூப்பு தொடர்பான உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மெலனோமா எனும் தோல் புற்றுநோய் அவருக்கு இருந்தது. கடந்த ஆண்டு அவரது மருத்துவச் சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து, அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்ட  நிலையில்  மறைந்தார்.

சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் கண்டறிய பல ஆண்டுகளாக போராடியவர் ஜிம்மி கார்டர். மனித உரிமைகளைப் பேண, பொருளாதார, சமூக வளர்ச்சியை மேம்படுத்த அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதனை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கடந்த 2022ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

முன்னாள் அதிபர் மறைவினையொட்டி அமெரிக்க வெள்ளை மாளிகையில் அந்நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

ஜோ பிடன் இரங்கல்

ஜிம்மி கார்டர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் ஜோ பிடன், “அமெரிக்காவின் இளம் தலைமுறையினரே நீங்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை என்றால் என்னவென்ற தேடுதலில் இருந்தால், ஜிம்மி கார்டரைப் படியுங்கள். அவர் நம்பிக்கையும், எளிமையும், கோட்பாடுகளும் நிறைந்த மனிதர்” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

டிரம்ப்

அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப், ஜிம்மி கார்டருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.”நம் நாட்டிற்கு ஒரு முக்கியமான நேரத்தில் வந்த சவால்களை ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி எதிர்கொண்டர். மேலும் அவர் அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். அதற்காக, நாம் அனைவரும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

Related Posts