32°C

‘டியூட்’ விமர்சனம்!

admin Published: October 17, 2025 3 நிமிட வாசிப்பு Updated: October 18, 2025 Running News
எழுத்து:

1990-களின் பிற்பகுதிக்கும் புதிய நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையே பிறந்தவர்கள் ஜென் ஸீ என்கிறார்கள். அவர்கள் காதல் மற்றும் பாலுறவுக்கான வழியைத் தேடிக் கண்டுபிடித்து பிடித்தவரை கொண்டாடுகிறார்கள். மாற்றுவழி வரும் போது கேஷூவலாக பிரிந்து போய் கொண்டே இருக்கிறார்ட்கள். இந்த பல்ஸைப் பிடித்து அடிசினலாக காதலுக்கு பல தரப்பிலும் இன்றைக்கும் தடையாக இருக்கும் சாதி வெறியால் நடக்கும் விபரீதங்கள் போன்றவற்றையும் எளிமையாக, அதே சமயம் அழுத்தமாக சொல்லி இருப்பதே டியூட் மூவி. இது இன்றைய இளசுகளின் கதை என்றாலும் பலருக்கு புதிகாக இருப்பதால் ஏற்க தயங்கு, கதையிது என்பதும் நிஜம்

அதாவது கோமாளித்தனமான ஈவென்ட் நடத்தும் மேனேஜ்மெண்ட் ஓனரான அகன் (பிரதீப் ரங்கநாதன்), லவ் பெயிலரில் ட்ல்லாலொ நடமாடிக் கொண்டிருக்கிறார். இச்சூழலில் நாயகனின் மாமாவும் அமைச்சருமான அதியமான் அழகப்பனின் (சரத்குமார்) மகள் குறள் (மமிதா பைஜூ) ஹீரோ அகனைத் தேற்றியப்படி தன் காதலையும் சொல்கிறார்.ஆனால் அதை ஏற்க மறுக்கும் அகன் குறள் மீது ஜஸ்ட் ப்ரண்ட்ஷிப் மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார். இதில் மூட் அவுட் ஆகி விடும் குறள் மேல்படிப்புக்காக வேறு ஊருக்குச் போய்விடுகிறார். இதை அடுத்து குறளின் பிரிவால் அவர் மீதான காதலை உணரும் அகன் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து தனது மாமாவும் அமைச்சருமான அதியமானிடம் (சரத்குமார்) சென்று சொல்கிறார். உடனடியாக சம்மதம் தெரிவிக்கும் அவர், திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். திருமணம் நடக்கும் தினம் அன்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லையென்றும், தான் வேறு ஒருவர் மீது காதலில் விழுந்துவிட்டதாகவும் அகனிடம் சொல்கிறார் குறள். இதைஅடுத்து நடக்கும் சம்பவங்களே அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் வழங்கி இருக்கும் ‘டியூட்’ படக் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நாயகன் பிரதீப் வழக்கம் போல் லவ், காமெடி, டேன்ஸ், அஷ்டகோணலுடன் கோப முகம் காட்டுதல், சீண்டல் என பயணப்பட்டாலும் படத்தை எனர்ஜியாக கொண்டு செல்லுவதில் ஸ்கோர் செய்து விடுகிறார். அதாவது அடுத்தடுத்து படங்கள் இளமை துள்ளலாகவும், சென்டிமென்ட் டச்சுடனும் அமைந்து விடுவது அதிர்ஷ்டம்தான். அந்த அதிர்ஷ்டம் பி.ர-வுக்கும் டியூட் படத்திலும் அமைந்திருக்கிறது. தொடக்க காட்சியில் கைவிட்ட காதலியின் திருமணத்துக்கு வந்து பிரதீப் செய்யும் அலப்பறையே மனுஷன் என்னமோ செய்யப்போகிறான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அங்கு அவர் செய்யும் அட்டகாசம் திருமண வீட்டையே அல்லோகலப்பட வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறது.குறிப்பாக சில பேரையும் கவர வேண்டிய எமோஷன் காட்சிகளின் கனத்தையும் புரிந்து மிகச்சரியாக புரிந்து அதை முதுகில் சுமந்து டியூட்டை கரை சேர்க்க பாடுப்பட்டுள்ளார். ஹீரோயின் மமிதா பைஜு க்யூட்டா இருக்கிறார். பர்பெக்டாக நடிக்கவும் செய்திருக்கிறார், அவரை மையப்படுத்திதான் முழுக் கதையும் பயணிக்கிறது. தன் காதலை பிரதீப் மறுத்த பிறகு உடைந்து அழுவது, சில காலம் சென்று அதே பிரதீப்பை திருமணம் செய்ய நேர்கின்ற போது இடைப்பட்ட காலத்தில் பூத்துவிட்ட இன்னொரு காதலை என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி நிற்பது, முதலில் காதலை மறுத்த பிரதீப் இப்போது தன்னைக் காதலிக்கிறான் என்றறிந்து அவன் நலனுக்காக தேம்புவது என கிடைத்த வாய்ப்பை எல்லாம் நன்றாக பயன்படுத்தி கவனம் ஈர்த்து விடுகிறார்.

மமிதாவின் அப்பாவாக வரும் சரத்குமார்தான் படத்தின் ஹீரோ என்ற லெவலில் படம் முழுக்க வந்து எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தருகிறார். மகள் மீது பாசம் காட்டுவது, திடீரென்று அவரது கழுத்தை நெரித்து கொல்ல முயல்வது என இவர் வில்லனா நல்லவரா என்பது முடிவு செய்ய முடியாமல் திணறவைக்கிறது.பரிதாபங்கள் திராவிட் செல்வம், ரோஹினி, ஹீரோயினின் காதலராக வருபவர் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

மியூசிக் டைரக்டர் சாய் அபயங்கரின் இசையில் ‘ஊரும் ப்ளட்’ ஹிட் ஆன நிலையில் அது படத்தில் பார்க்கும் போது ஹேப்பியாக இருக்கிறது. ஏனைய பாடல்கள் கொஞ்சமும் ஒட்டவில்லை. பின்னணி இசை மூலம் படத்துக்கு வலு சேர்த்துள்ளார்.

அந்த ஏழு நாட்கள், குட்டி, லவ் டுடே போன்ற படங்களை நினைவுப் படுத்தி இருந்தாலும் கிளைமாக்சில் தாலி செண்டிமெண்டுக்கு தரும் விளக்கம் நறுக்கு தெறிக்கிறது. தாலி முக்கியமில்லை தாலிக்கு பின்னால் இருக்கும் பெண்ணின் உணர்வுக்குத்தான் மரியாதை என்ற விளக்கம் சூப்பர்.. கூடவே இளசுகளின் மனவோட்டத்தை சகல வயதினரும் புரிந்து கொள்ள பார்க்க வேண்டிய படமிது

மார்க் 4/5