இந்தியன் வங்கியில் நான்கு நாட்களுக்கு பணப் பரிவர்த்தனைகள் கிடையாது!

இந்தியன் வங்கியில் நான்கு நாட்களுக்கு பணப் பரிவர்த்தனைகள் கிடையாது!

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படவிருக்கும் நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப் பழைமையான பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கி. இந்த வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்படவிருக்கிறது. வரும் 15ஆம் தேதி, இரு வங்கிகளும் இணைக்கப்பட உள்ளது. இதனையடுத்து இன்று இரவு 9 மணி தொடங்கி திங்கள் காலை 9 மணி வரை இணைப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால் இந்தியன் வங்கியில் ( இன்று) பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு 9 மணி தொடங்கி,13,14&15 ஆம் தேதி காலை 9 மணி வரை அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைப்பு இருப்பதால் இந்த இரு வங்கிகளிலும் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், பணப் பரிவர்த்தனை, செக் போன்ற சேவைகளை பயன்படுத்துவதில் தற்காலிக பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!