சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 20 பேர் பலி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 20 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தியா முழுவதுக்கும் இங்கிருந்து பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த பட்டாசு தொழிலை நம்பியே இருந்துவருகிறது. இருப்பினும், பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடிவிபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்துவருகிறது. அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் விபத்து தொடர்ந்துவருகிறது. இந்த நிலையில், சாத்தூர் பகுதியிலுள்ள அச்சம்குளம் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்தன. தொடக்கத்தில் வெடி விபத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் 5-ஆக இருந்தநிலையில், பின்னர், 8, 11 என்ற அதிகரித்தது. இந்தநிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 3 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் நிவாரண உதவியாக அறிவித்துள்ளார். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரண உதவியாக அறிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!