சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்- காரணம் இதுதான்!

சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்- காரணம் இதுதான்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த பென் ஸ்டோக்ஸ் 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சிஎஸ்கே அணிக்கு தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கடந்த ஏலத்தில் சென்னை அணி 16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த தொடரில் காயம் காரணமாக 2 போட்டிகளில் மட்டுமே சென்னை அணிக்காக விளையாடினார். ஜனவரி 24 முதல் மார்ச் 11 வரை இங்கிலாந்து அணி இந்தியாவுடன் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது என்பதும் ஆனால் பென் ஸ்டோக்ஸ்-க்கு கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது..1

ஐபிஎல் 17 ஆவது சீசன் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 26ம் தேதி அதற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஏலத்திற்கு முன் டிரேடிங் முறை மூலம் வீரர்களை விற்றுக்கொள்ளலாம். இதனால் ஐபிஎல் அணிகள் டிரேடிங் முறை மூலம் வீரர்களை விற்றும், வாங்கியும் வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு அதாவது 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே அணி தெரிவித்துள்ளது.

இது குறித்து சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பென் ஸ்டோக்ஸ் தங்களிடம் பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கூறி இருக்கிறார் என தெரிவித்துள்ளது. மேலும், அவர் 2023 உலகக்கோப்பை தொடரில் ஆடியது, அடுத்து இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட வேண்டிய சூழ்நிலைகளை புரிந்து கொண்டு பென் ஸ்டோக்ஸ் விலகலுக்கு தாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்து உள்ளது.

பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், பின்னர் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்து ஆடினார். அதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்து அணிக்காக ஆட உள்ளார்.பின்னர் பிப்ரவரி – மார்ச் மாதம் இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க உள்ளார். அதன் பின் ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த சூழலில், பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்றால் தொடர்ந்து நான்கு – ஐந்து மாதங்கள் தீவிரமாக கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டி வரும். எனவே, இடையே வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்-க்கு கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. 2023 உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்காமல் போயிருந்தால் அவர் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் அந்த சிகிச்சையை தள்ளிப் பொட்டு இருக்கிறார். அவரால் நீண்ட பந்து வீசவும் முடியாத நிலை உள்ளதால் இந்த விலகல் முடிவாம்!.

error: Content is protected !!