கொரோனா :ஓடவும் முடியாது : ஒளியவும் முடியாது!- உலக சுகாதாரம் & வங்கி கவலை!

கொரோனா :ஓடவும் முடியாது : ஒளியவும் முடியாது!- உலக சுகாதாரம் & வங்கி கவலை!

உலகளவில் இதுவரை கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 26 லட்சத்தை கடந்து  உள்ளது; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,83,120 ஆக உள்ளது. இந்தியாவில், 21,403 பேர் பாதித்துள்ளனர்; 681 பேர் உயிரிழந்துள்ளனர்’ என, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும். என்று உலக சுகாதர மைய்யமும் இந்த கொரோனாவால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தெற்காசிய பிராந்தியங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், வெளிநாடு மற்றும் உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மோசமாகப் பாதித்து உள்ளனர். குறிப்பாக, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள, 4 கோடிக்கும் மேற்பட்ட மக்களை, கடுமையாகப் பாதித்துள்ள நிலைமை அதிகரித்துக் கொண்டே போகுமென்று உலக வங்கியும் தெரிவித்துள்ளது.

WHO கூற்றுப்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஜனவரி 30 அன்று ‘சரியான நேரத்தில்’ உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது. மேற்கு ஐரோப்பாவில் பெரும்பாலான தொற்றுநோய்கள் குறைந்து வருவதாகத் தெரிகிறது. எண்கள் குறைவாக இருந்தாலும், ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மேல்நோக்கிய போக்குகளைக் காண்கிறோம். பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோய்களின் ஆரம்ப கட்டத்தில் உள்ளன என்றார். ஆனாலும் எந்த தவறும் செய்யாதீர்கள்: நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும். கொரோனா வைரஸ் தொற்றை ஜனவரி 30 அன்று நாங்கள் அவசரகாலம் சரியான நேரத்தில் அறிவித்தோம்.

இந்நிலையில், உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளும் ஊரடங்கு பிறப்பித்துள்ளன. இதனால், சிறு குறு தொழில் நிறுவனங்களும் மிகப் பெரிய தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தி உள்ளன. சாதாரண தொழில் அமைப்புகளும் முடக்கப்பட்டன. இதனால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தெற்காசிய பிராந்தியங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், வெளிநாடு மற்றும் உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மோசமாகப் பாதித்துள்ளனர். குறிப்பாக, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள, 4 கோடிக்கும் மேற்பட்ட மக்களை, கடுமையாகப் பாதித்துள்ளது. ஊரடங்கு அமலான ஒருசில நாட்களிலேயே, 60 ஆயிரம் பேர் வரை நகரப்பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த கிராமப் பகுதிகளுக்கு திரும்பினர். ஆனால் இது எந்த வகையிலும் அவர்களுக்குத் தீர்வைத் தராது. இந்நிலையில் இந்தியாவில் மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதால், இந்த தொழிலாளர்களின் நிலை மேலும் மோசமடையும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!