32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 86 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 86)
தந்தையின் பேரன்பு -புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்து முதல்-அமைச்சர் பேச்சு1 Exclusive

தந்தையின் பேரன்பு -புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்து முதல்-அமைச்சர் பேச்சு1

உலகை வென்றிடத் துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக 2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், ‘அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் […]

September 5, 2022 admin
அ.தி.மு.க. வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு! Exclusive

அ.தி.மு.க. வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப் போவதாக ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று […]

September 2, 2022 admin
இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்!- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! Exclusive

இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்!- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

ஒரே ஒரு ரூபாய்க்கு 3 வேளை உணவு வழங்கி வரும் ஈரோடு தம்பதியினரின் ஈர மனது எனது இதயத்தையும் நனைத்துவிட்ட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்களுக்கு, வெங்கட்ராமன்–ராஜலட்சுமி தம்பதியினர் 1 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கி சேவையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த தம்பதியினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது சோசியல் மீடியா பதிவில், வெங்கட்ராமன்–ராஜலட்சுமி தம்பதியினர் 1 […]

September 1, 2022 admin
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்படவில்லை : ஐகோர்ட் கருத்து! Exclusive

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்படவில்லை : ஐகோர்ட் கருத்து!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை அறிக்கையின்படி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமே இல்லை என்று பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவில் சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கு கடந்த 26-ந் தேதி […]

August 30, 2022 admin
இது தப்பாச்சே..துணை வேந்தர்கள் நியமன மசோதாவுக்கு கவர்னர் எதிர்ப்பு! Exclusive

இது தப்பாச்சே..துணை வேந்தர்கள் நியமன மசோதாவுக்கு கவர்னர் எதிர்ப்பு!

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவுக்கும் கவர்னர் ரவிக்கும் மோதல் போக்கு நீறு பூத்த நெருப்பாக தொடர்கிறது. தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழுசட்டத்துக்கு புறம்பானது எனக் கூறி இது தொடர்பான மசோதா குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு கவர்னர் ஆர் என் ரவி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பலகலைக்கழகங்களில் வேந்தரான கவர்னருக்கு இருந்து வருகிறது. துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழகங்களின் […]

August 20, 2022 admin
‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன்( 77) காலமானார்! Exclusive

‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன்( 77) காலமானார்!

தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன்( 77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார். நெல்லை கண்ணன். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன். இவர் தமிழக அரசின் […]

August 18, 2022 admin
சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள்! Exclusive

சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்த 7 முக்கிய அறிவிப்புகள்!

“உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அறிவிப்பில், ”அதனால்தான் தியாகத்தைப் போற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் முன்னிலையில் இருந்து வருகிறது. நாட்டுப் பற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளது. 1962-ஆம் ஆண்டு, சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் […]

August 15, 2022 admin
முகக்கவசத்திற்கு எதிராக வழக்கு போட்டவருக்கு அபராதம் – ஐகோர்ட் அதிரடி! Exclusive

முகக்கவசத்திற்கு எதிராக வழக்கு போட்டவருக்கு அபராதம் – ஐகோர்ட் அதிரடி!

தமிழ்நாட்டில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது மட்டுமின்றி இக்கோரிக்கை வைத்தவருக்கு அபராதமும் விதித்தது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கடடாயம் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும் அவ்வாறு அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் ஒரு மனு […]

August 11, 2022 admin
செஸ் ஒலிம்பியாட் :வெற்றி பெற்ற 2 இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி!- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் Exclusive

செஸ் ஒலிம்பியாட் :வெற்றி பெற்ற 2 இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி!- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் சென்னையில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழா ஜூலை 28 நடைபெற்ற நிலையில், நிறைவு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யானதன், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேலும் இதில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி கோப்பைகளை வழங்கி கெளரவித்தார். இதனிடையே தமிழர்களின் தொன்மைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் விதமாக மேடையில் […]

August 10, 2022 admin
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைங்கோ: சென்னை மாநகராட்சி வேண்டுகோள் Exclusive

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைங்கோ: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்கள்வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வாக்காளர்களிடம் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படிவம் 6B-–யை வாக்காளர்கள் தாமாக முன்வந்து பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் பட்டியலில் […]

August 9, 2022 admin
உடனடி செய்திகள்