32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 85 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 85)
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் : பரவும் சர்ச்சை! Exclusive

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் : பரவும் சர்ச்சை!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் (உறுப்பினர் எய்ம்ஸ் மதுரை) தலைமையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது 95 சதவீத பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே என்ற பதாதைகளை கைகளில் ஏந்தியபடி எய்ம்ஸ் அமைவிடத்தை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்த […]

September 23, 2022 admin
ஆம்னி பேருந்துகளில் அதன் சங்கம் சார்பில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்! Exclusive

ஆம்னி பேருந்துகளில் அதன் சங்கம் சார்பில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்!

ஆயுதபூஜை தொடங்கி தீபாவளி உள்ளிட்ட விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் எதிரொலியாக, ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– கொரோனா தொற்றுக்கு முன் தமிழ்நாட்டிலுள்ள நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் மற்றும் சுற்றுலாவிற்கும் மொத்தம் 4,000 ஆம்னி பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன. கொரோனா தொற்றுக்குப் பின் தற்பொழுது தமிழ்நாட்டில் 1,500 பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டுள்ளன. […]

September 21, 2022 admin
ஸ்விகி ஊழியர்கள் போராட்டம்! Exclusive

ஸ்விகி ஊழியர்கள் போராட்டம்!

பணி நேரம் மாற்றம், ஊக்கத் தொகை ரத்து, பெட்ரோல் தொகை குறைப்பு உள்ளிட்ட புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்விகி நிறுவனத்தின் ஸ்விகி உணவு டெலிவரி ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஸ்விகி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உணவு உள்ளிட்ட பல பொருட்களை டெலிவரி செய்யும் பணியை செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் ஸ்விகி நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்விகி நிறுவனத்தின் புதிய விதிமுறைகளை எதிராக இவர்கள் போராட்டத்தில் […]

September 20, 2022 admin
குழந்தைகள் காலை உணவு உண்ணும் போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி- முதல்வர் நெகிழ்ச்சி! Exclusive

குழந்தைகள் காலை உணவு உண்ணும் போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி- முதல்வர் நெகிழ்ச்சி!

”மாணவ செல்வங்களே உங்களுக்கு காலையும், மதியமும் உணவு வழங்குகிறோம். நீங்கள் எதை பற்றியும் கவலை படாமல் படியுங்கள், படியுங்கள், படியுங்கள். கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. அதை உங்களது சொத்தாக ஆக்கி கொள்ளுங்கள். எந்த காரணம் கொண்டும் கல்வியை விட்டு விலகி செல்லாதீர்கள், விலகி செல்ல நான் விட மாட்டேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஏழை குழந்தைகள் காலை உணவு அருந்தாமலேயே பள்ளிக்கு வருவதால் சோர்வு அடைவதால் அதனை போக்கும் நோக்கில்   மாநகராட்சி […]

September 16, 2022 admin
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், தர்மம் நீதி வென்றுள்ளது!- எடப்பாடி ஹேப்பி! Exclusive

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், தர்மம் நீதி வென்றுள்ளது!- எடப்பாடி ஹேப்பி!

அதிமுக அலுவலக உரிமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டின் 2ஆவது மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை மூடி சீலிடுவது என்பது சாதாரண விவகாரம் அல்ல. ஒருகட்சியின் இருதரப்பு மோதிக் கொள்கிறார்கள் என்றால் அது சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னை ஆகும். ஆனால் இந்த விவகாரத்தில்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாமல் எப்படி அலுவலகத்திற்கு உரிமை கோரமுடியும்? என நீதிபதிகள் […]

September 12, 2022 admin
ஷாக் அடிக்க வைக்கும் மின்( புது) கட்டண உயர்வு விவரம் விவரம் இதோ! Exclusive

ஷாக் அடிக்க வைக்கும் மின்( புது) கட்டண உயர்வு விவரம் விவரம் இதோ!

தமிழகத்தில் மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் உயர்வு இன்று முதலே அமலுக்கு வந்து விட்டது. ஏற்கெனவே சிரமத்தில் இருக்கும் சூழலில் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026-27 ஆம் ஆண்டு வரை புதிய கட்டண உயர்வு அமலில் இருக்கும். என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. […]

September 10, 2022 admin
ஓ.பன்னீர்செல்வம் – பேரைக் கேட்டாலே பிடிக்கலை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்! வீடியோ Exclusive

ஓ.பன்னீர்செல்வம் – பேரைக் கேட்டாலே பிடிக்கலை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்! வீடியோ

ஓ.பன்னீர்செல்வம் பச்சோந்தியை விட மோசமாக நடந்துகொள்கிறார்..அவரை ஒரு போதும் தொண்டர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற வன்முறை சம்பவம் காரணமாக, அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 72 நாட்கள் […]

September 9, 2022 admin
ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு முதல்வர் நேரில் வாழ்த்து! – வீடியோ Exclusive

ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு முதல்வர் நேரில் வாழ்த்து! – வீடியோ

‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற் கொண்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி. இந்த நடை பயணத்தை கன்யாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், […]

September 7, 2022 admin
சென்னை ஐகோர்ட் சென்னை தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்! Exclusive

சென்னை ஐகோர்ட் சென்னை தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்!

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி செப்டம்பர் 12-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள எம்.துரைசாமி, கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி பிறந்தார். இவர் இளநிலை வணிகவியல் (B.Com) பட்டப்படிப்பை முடித்து, […]

September 6, 2022 admin
சமூக ஊடகங்களை கண்காணிக்க கண்காணிப்பு குழு – டி.ஜி.பி ஆர்டர்! Exclusive

சமூக ஊடகங்களை கண்காணிக்க கண்காணிப்பு குழு – டி.ஜி.பி ஆர்டர்!

இன்றைய காலக்கட்டத்தில் பலரால் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்பி குழப்பம், சண்டை கலவரங்களை ஏற்படுத்தும் நபர்களைக் கண்காணிக்க தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடகக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” யூடியூப், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்களைப் பதிவு செய்து, வதந்திகளைப் பரப்பி அதன்மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும், காவல் துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய […]

September 5, 2022 admin
உடனடி செய்திகள்