32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 84 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 84)
செப்டிக் தொட்டிகள் சுத்தம் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை! Exclusive

செப்டிக் தொட்டிகள் சுத்தம் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

கடந்த சில மாதங்களாகவே கழிவுநீர் தொட்டியில் சுத்தம்செய்வதன் மூலம் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பலரும் மனிதகழிவுகளை மனிதர்களே நீக்குவதா என்று கண்டனம் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, கட்டிடங்கள், கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது! கைகளால் மலம் […]

October 20, 2022 admin
ஜெ. மரணம் : பல முரண்பாடுகள் -.. சசிகலா, விஜயபாஸ்கர் குற்றவாளி: ஆறுமுகசாமி ஆணையம் பகீர் தகவல்! Exclusive

ஜெ. மரணம் : பல முரண்பாடுகள் -.. சசிகலா, விஜயபாஸ்கர் குற்றவாளி: ஆறுமுகசாமி ஆணையம் பகீர் தகவல்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண சந்தேகம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது.இதையடுத்து ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது. இதையடுத்து 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்தது. […]

October 18, 2022 admin
சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆர்பிஐ அங்கீகாரம்! Exclusive

சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆர்பிஐ அங்கீகாரம்!

சென்னையில் செயல்பட்டு வரும் ‘டைக்கி’ என்ற கட்டணம் திரட்டும் (Payment Aggregator) ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையளவில் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் கிடைத்திருக்கிறது.தமிழகத்திலேயே இந்த உரிமம் பெற்ற ஒரே நிறுவனமாக அது பெருமை பெற்றுள்ளது. இது போன்ற ரிசர்வ் வங்கியின் முயற்சிகள் சாமான்ய மக்களுக்கும், தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கும் பாலமாக தொடர்புகளை ஏற்படுத்தி அமைப்புசாரா தொழில் பிரிவில் நல்லிணக்கம் ஏற்பட வழிவகுக்கிறது. சென்னையைச் சார்ந்த ‘பேசிஸ்பே’ என்ற தொழில் நிறுவனத்தின் கீழ் உள்ள ‘டைக்கி சொலுஷன்ஸ் […]

October 17, 2022 admin
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் அமையும் – தமிழக அரசு அறிவிப்பு Exclusive

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் அமையும் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையானது, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கை செய்துள்ளது. தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தது. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் […]

October 13, 2022 admin
என்னை மேலும் துன்பப்படுத்தலாமா? – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை! Exclusive

என்னை மேலும் துன்பப்படுத்தலாமா? – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை!

தமிழகத்தை ஆளும் கட்சியான திமுகவின் பொதுக் குழு சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன்சென்டரில்” நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் முக்கிய நிகழ்வாக – தி.மு.கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இன்று பொதுக்குழுக் கூட்டம் […]

October 9, 2022 admin
எழுதி வைத்த சொத்துக்களை  ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை – மெட்ராஸ் ஐகோர்ட்  அதிரடி உத்தரவு! Exclusive

எழுதி வைத்த சொத்துக்களை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை – மெட்ராஸ் ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தனர். ஆனால், வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும், மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து பெற்றோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரித்தார். நகைகளை விற்றும், சேமிப்புகளை கரைத்தும், தங்கள் மருத்துவ செலவுகளை […]

October 8, 2022 admin
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – கவர்னர் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியீடு! Exclusive

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – கவர்னர் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியீடு!

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான தற்கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த செப்.,26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர […]

October 7, 2022 admin
சொத்து வரி : சென்னை மாநகராட்சியின் சலுகை அறிவிப்பு! Exclusive

சொத்து வரி : சென்னை மாநகராட்சியின் சலுகை அறிவிப்பு!

அக்டோபர் 15-–ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத சலுகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் முதல் அரையாண்டில் செப்டம்பர் வரையிலும் அடுத்த அரையாண்டு ஏப்ரல் வரையிலும் சொத்துவரி செலுத்தலாம். இந்த நிலையில், பொதுமக்கள், சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, 2-–ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 15–ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், 2022–-2023–ம் ஆண்டுக்கான முதல் […]

October 6, 2022 admin
கோடநாடு கொலை & கொள்ளை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு! Exclusive

கோடநாடு கொலை & கொள்ளை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்தது. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு தனிப்படையினரும் பிரிந்து சென்று பலரிடம் விசாரணை நடத்தினர். முக்கிய குற்றவாளியான சயான், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சம்சீர் அலி, மனோஜ்சாமி மற்றும் அரசு […]

September 30, 2022 admin
தமிழகமெங்கும் காந்தி ஜெயந்தி நாளில் கிராம சபை கூட்டங்கள்! Exclusive

தமிழகமெங்கும் காந்தி ஜெயந்தி நாளில் கிராம சபை கூட்டங்கள்!

தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த கூட்டம் அக்டோபர் 2–ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது. டெங்கு பரவுவதை கட்டுபடுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டம் குறித்த […]

September 25, 2022 admin
உடனடி செய்திகள்