ஷாக் அடிக்க வைக்கும் மின்( புது) கட்டண உயர்வு விவரம் விவரம் இதோ!

தமிழகத்தில் மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் உயர்வு இன்று முதலே அமலுக்கு வந்து விட்டது. ஏற்கெனவே சிரமத்தில் இருக்கும் சூழலில் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026-27 ஆம் ஆண்டு வரை புதிய கட்டண உயர்வு அமலில் இருக்கும். என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மின்கட்டணம் உயர்வு குறித்து முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி “ 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும், உயர்த்தப்படுகிறது “ என்று தெரிவித்தார்.
இதேபோல, 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாட்டில் மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனி புது கட்டண உயர்வு விவரம் விவரம் இதோ:
> 2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 1 யூனிட் கட்டணம்: ரூ.4.50, 200 முதல் 300 யூனிட்கள் வரை ஒவ்வொரு 50 யூனிட்டுக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 300 முதல் 400 யூனிட்டுகளுக்கும் ஒரு கட்டணமும், 400 முதல் 500 யூனிட்கள் வரை புதிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி:
100 யூனிட்கள் வரை கட்டணம் இல்லை
101 – 200 யூனிட்கள் வரை 1 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.4.50
201 – 250 யூனிட்கள் வரை 1 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.6.00
251 – 300 யூனிட்கள் வரை1 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.8.00
301 – 400 யூனிட்கள் வரை 1 யூனிட்டுக்கு கட்டணம் ரூ. 9.00
401 – 500 யூனிட்கள் வரை 1 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.10.00
500 யூனிட்களுக்கு மேல் 1 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.11.00
தொழில், கடைகளின் மின்கட்டண உயர்வு விபரம்:
தற்காலிக இணைப்புக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.12.00
தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ. 6.50
அரசு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.7.00
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.7.50
கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 8.50
மாதம் நிலையான கட்டணம் ரூ.550